சனி, 30 ஜூன், 2012

"மாரியம்மன் தாலாட்டு"


ஊத்துக்காட் டமர்ந்தவளே உதிரபலி கொண்டவளேவீராணம் பட்டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தேசமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்கன்னபுரத் தெல்லையெல்லம் காவல்கொண்ட மாரியரேஎக்கால தேவியரே ஈஸ்வரியே யிறங்குமம்மாதிக்கெல்லாம் பேர்படைத்த தேசத்து மாரியரேஅண்ட புவனமெல்லாந் துண்டரீக முள்ளசக்திகச்சிப் பதியாளே காமாட்சித் தாயாரேகைலாச லோகமெல்லாம் காவல்கட்டி யாண்டவள
பாதாள லோகமெல்லாம் பரதவிக்கப் பண்ணசக்தி[400]



காலைக் கொலுவிலம்மா காத்திருந்தா ராயிரம்பேர்
உச்சிக் கொலுவிலம்மா உகந்திருந்தா ராயிரம்பேர்
அந்திக் கொலுவிலம்மா அமர்ந்திருந்தா ராயிரம்பேர்
கட்டியக் காரரெல்லாம் கலந்தெச்சரிக்கை பண்ண
பாடும் புலவரெல்லாம் பண்பிசைந்த பாடல்சொல்ல
வடுகர் துலுக்கரோடு மராட்டியர் கன்னடியர்
கன்னடியர் காவலுடன் கனாட்டுப் பட்டாணியர்
இட்டசட்டை வாங்காத இடும்பரெல்லாம் காத்திருக்க
போட்டசட்டை வாங்காத பொந்திலியர் காத்திருக்க
வடுகர் துலுக்கரம்மா மறுதேசப் பட்டாணியர் [410]

வேடிக்கை பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும்
கேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து
மாயமெல்லா முன்மாயம் மருளரெல்லா முன்மருளர்
மருளர் தழைக்கவம்மா மருமக்க ளீடேற
பலிச்சட்டி தானெடுக்கும் புத்திரர்கள் தான்றழைக்க
வேதங்கள் தான்றழைக்க விண்ணவர்க ளீடேற
குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே கண்பாரும்
மைந்தர்கள் தான்றழைக்க மாதாவே கண்பாரும்
காஞ்சிபுரியிலே தான் கர்த்தரையும் நீ நினைத்து
கர்த்தரையும் நீ நினைத்துக் காமாட்சி பூஜைபண்ணாய் [420]