சனி, 18 ஆகஸ்ட், 2012

அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தின் 33வது ஆண்டு நிறைவாகவும் முன்னாள் கோல்காப்பாளர் நவரெத்தினராஜா சுதர்ஷன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவாகவும் நடாத்தப்பட்ட மாபெரும் காற்பந்தாட்ட சமர்- 2012

அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தின் 33வது ஆண்டு நிறைவாகவும் விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தின் முன்னாள் கோல்காப்பாளர் நவரெத்தினராஜா சுதர்ஷன் அவர்களின் 11ம் ஆண்டு
நினைவாகவும் 11.12- 08-2012 ஆகிய தினங்களில் நடாத்தப்பட்ட அணிக்கு 9பேர் கொண்ட மாபெரும்  காற்பந்தாட்ட சமரில் 32 அணிகள் கலந்து சிறப்பித்தன.

இதில் முதலாம் சுற்றில் காஞ்சிரங்குடா காளிகா அணியினரை 3 ற்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி விக்னேஸ்வரா ஏ அணியினர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

இரண்டாம் சுற்றில் காஞ்சிரங்குடா காமகட்சி அணியினரை 3 ற்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி விக்னேஸ்வரா ஏ அணியினர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

கால் இறுதிச் சுற்றில் பனையறுப்பான் கஜமுகா அணியினரை 2 ற்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி விக்னேஸ்வரா ஏ அணியினர் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

அரை இறுதிச் சுற்றில் முனைக்காடு ராமகிருஸ்ணா அணியினரை 1 ற்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி விக்னேஸ்வரா ஏ அணியினர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதிச் சுற்றில் பன்சேனை உதயயொளி அணியினரை 3 ற்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி விக்னேஸ்வரா ஏ அணி அபார வெற்றியீட்டியது .

 சிறந்த ஆட்டநாயகனாக பன்சேனை உதயயொளி அணியின் ச.வேதநாயகம் தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த கோல்காப்பாளராக விக்னேஸ்வரா ஏ அணியின் க.கவிசங்கர் தெரிவு செய்யப்பட்டார்.

வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கிண்ணமும் பணப் பரிசுகளும் வழங்கி கெளரிக்கப்பட்டது.

விசேட நிகழ்வாக அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் முன்னால் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும்  நினைவுக் கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கெளரிக்கப்பட்ட முன்னால் வீரர்களின் பெயர் விபரம்
பு.கந்தப்போடி
சி.பெரியம்பி
இ.எதிர்மன்னசிங்கம்
அ.இராசதுரை
கு.வீரசிங்கம்
சீ.விசுவலிங்கம்
தி.தங்கத்துரை
தி.இராஜேஸ்வரி
பா.ஜெகநாதன்
தே.சீர்மலாதேவி
இ.புஸ்வராணி

இதில் சிறப்பம்சமாக
பிரதம விருந்தினர் த.பேரின்பராஜா (தவிசாளர் ம.தெ.மே.கொக்கட்டிச்சோலை)

கௌரவ விருந்தினர்
திரு. த.சோமசுந்தரம் (அதிபர் மட்/முதலைக்குடா மகா வித்தியாலம்)
திரு.க.தியாகராஜா (ஆலய பரிபாலன சபைத்தலைவர் அரசடித்தீவு)                                                

அழைப்பு அதிதிகள் 
திரு.க.துரைராஜசிங்கம் (தலைவர் கிராம அவிபிருத்தி சங்கம் அரசடித்தீவு)
திரு.நீ.ருசகுமார் (தலைவர் இந்து சமயவளர்ச்சி மன்றம் அரசடித்தீவு)

விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கிண்ணமும் பணப் பரிசுகளும் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் முன்னால் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும் நினைவுக் கேடயமும் வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 கருத்து: