புதன், 20 பிப்ரவரி, 2013

சர்வதேச தாய் மொழி தினம்- 2013 (தமிழ் பாடல் இணைப்பு)

பெப்ரவரி 21ந் திகதி, சர்வதேச தாய்மொழி தினமாக UNESCO நிறுவனத்தினால் நவம்பர் 1999இல் பிரகடனப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்மொழி, பல்கலாசாரம் ஆகியவற்றை முன்னிலைப் படுத்தவும், தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தவுமே சர்வதேச தாய்மொழி
தினம் அனுட்டிக்கப்படுகிறது.  தாய்மொழிக் கல்வியையும், பன்மொழிக்கல்வியையும் ஊக்குவிக்கவேண்டு மென்று, தமது அங்கத்துவநாடுகளிடம் இவ்வருடம் UNESCO கோரிக்கை விடுத்துள்ளது. பாகுபாடுகளைக் குறைத்து, இணைந்து வாழ்வதற்கும், கல்விப்பயன் பெறவும், தாய்மொழியும், பன்மொழிக் கல்வியும் உறுதுணையாக அமையும் என்றும்  UNESCOவின் இவ்வாண்டுக்கான சர்வதேச தாய்மொழி தின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
         மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும்.
           மனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான, நமது மொழியின் அருமை தெரியாமல், பிறமொழி மோகத்தில் தமிழை, தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம். தாய் மொழி தமிழின் அருமையை, இனிமையை, மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக