செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடைபெற்று வருகின்ற இரவுநேர கற்றல் கற்பித்தல் தொடர்பாக நடைபெற்ற ஒன்றுகூடல்


அரசடித்தீவு விக்னேஸ்வரா கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடைபெற்று வருகின்ற இரவு நேர கற்றல் கற்பித்தல் தொடர்பாக ஒன்றுகூடல் ஒன்று மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் 12.02.2013 இரவு 6.30 மணியளவில் தலைவர் தே.பவளசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 5ம் தரம்
மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் தொடர்பாக சபையில் ஆராயப்பட்டது. தரம் ஐந்து 36 மாணவர்கள் இவ் இரவு நேர வகுப்புக்களில் கலந்து கொள்கின்றனர் இவர்களை ஒன்றாக பாடம் கற்பிப்பது சிரமமான விடயம் என்பதால் இதற்கான ஆலோசணை சபையில் விடப்பட்டது.பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இதுதொடர்பாக நாளை பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் ஆலோசணைகளை கேட்டு அதற்கமைய கற்பித்தல் தொடருவதென தீர்மானிக்கப்பட்டது.  மேலும் எமது பாடசாலையில் கல்வி பயிலும் அயலூர் மாணவர்களை இரவுநேர வகுப்புக்களில் எப்படி உள்வாங்குவது என்பது பற்றியும் ஆராயப்பட்டது. தொடர்ந்து மேற்பார்வையாளர்கள் எந்த நாள் யார் என்பது பற்றி சபையில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அவர்களால் வாசிக்கப்பட்டது.    தொடர்ந்து ஒழுக்காற்றுக்குழுவின் தலைவர் சி.வாலசேகரம் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் இரவு நேர வகுப்பு என்பதால் கட்டுப்பாடுகள் இறுக்கமாக இருக்கும் என்றும், மேற்பார்வையாளர்கள் அமைதியாகவும் ஒழுக்கத்துடனும் மாணவர்கள் மத்தியில் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்நது க.கிருபானந்தசிவம், சி.அருணகிரி, ச.காமராஜ் அவர்களும்  கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  செயலாளர் திரு.பே.ஜெயக்கமல் அவர்களினால் நன்றியுரையோடு இரவு 8.30 மணியளவில் கூட்டம் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிரியர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் என்று 75 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கடந்த 08.02.2013 வெள்ளிக்கிழமை அன்று வைபவ ரீதியாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரவு நேர கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களும்,இரவு நேர கடமையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்களின் விபரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.








  08.02.2013 வெள்ளிக்கிழமை அன்று வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டபோது
 08.02.2013 வெள்ளிக்கிழமை அன்று வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டபோது
  08.02.2013 வெள்ளிக்கிழமை அன்று வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டபோது
08.02.2013 வெள்ளிக்கிழமை அன்று வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டபோது




1 கருத்து: