திங்கள், 15 ஏப்ரல், 2013

அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்திய சுவாரஸ்யமான விளையாட்டு நிகழ்வு…


சித்திரை புத்தாண்டு என்றால் சிரித்து மகிழும் எம் சமூகம். கடந்த கால கசப்பான மன உணர்வுகளை மறந்து புத்துணர்ச்சியுடன் புதிய சிந்தணைகளுடன் இன்பம் பொங்க குடும்பங்கள்கூடி, நண்பர்கள்கூடி, ஊர்கூடி குதூகலம் காணும் இந்நாளில் மருத்துநீர் தேய்த்து மகிழ்ந்து நீராடி மனம் நெகிழ
இறைவன் ஆசிவேண்டி இன்னல்கள் மறந்து உறவுகள் கூடி மகிழும் நிகழ்வாக அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தினால் நாடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு விழா – 2013 நிகழ்வு 14.04.2013 பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. 
இவ் வருடம் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பல சுவாரசியமிக்க விளையாட்டுக்களும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. அந்த வகையில் தயிர் சாப்பிடுதல், மிட்டாய் ஓட்டம், புலிக்குவால் வைத்தல், தலையணைச் சமர், கயிறு இழுத்தல், முட்டைமாற்றுதல், கண்கட்டி முட்டி உடைத்தல், சாக்கோட்டம், மாவூதி காசெடுத்தல், மர்மமனிதனை கண்டுபிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இம்முறை சித்திரை விளையாட்டு நிகழ்வின் சிறப்பம்சமாக ஆரம்பக் கல்வியை மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா    வித்தியாலயத்தில் கற்று க.பொ.த சா/தரம் வரை மட்/கல்லடி விவேகானந்தா மகளீர் மகா வித்தியாலயத்திலே தொடர்ந்து   க.பொ.த சா/தர பரீட்சை 2012 இல் ஆங்கில மொழி மூலம் ஒன்பது பாடங்களிலும்  அதி விசேட தரம் 09(A) பெற்று சாதனை படைத்து எமது கிராமத்திற்கு பெருமை ஈட்டித் தந்த  முதல் மாணவியாக செல்வி.செல்வநாயகம் சசியந்தினி  அவர்களுடைய     திறமையினை பாராட்டி  அரசடித்தீவு கிராமத்தில்      "சாதனை படைத்த சரித்திர மாணவி"  என்ற விருது வழங்கி 2013 விஜய வருட சித்திரை விளையாட்டுப்    போட்டியின் போது விக்னேஸ்வரா விளையாட்டுக்       கழகத்தினால்   கௌரவித்து வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக