வெள்ளி, 21 ஜூன், 2013

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், கல்விசார் பணியாளர்கள் இணைந்து வழங்கிய தவநிலையும் முத்தமிழ் முரசமும் 2013

அரசடித்தீவு ஶ்ரீ முத்துமரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆறாம் நாள் திருச்சடங்கினை சிறப்பிக்கும் முகமாக மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், கல்விசார் பணியாளர்கள் இணைந்து வழங்கிய ''தவநிலையும் முத்தமிழ் முரசமும்'' கலை நிகழ்வுகள் 21.06.2013 வெள்ளி இரவு 9.00 மணியளவில் ஆலய முன்றலில்  வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திரு.சி.வரதராஜன் (ஆசிரியர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து திரு சிறிதரன் ஆசிரியர் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது. பாடலுக்கான அபிநயம், நகைச்சுவை நாடகம், சமூக சீர்திருத்த நாடகம், பேச்சு, நடனம் என 20 ற்கும் மேற்பட்ட கலை, கலாசார அமசங்கள்  நிறைந்த  நிகழ்சிகள் இடம்பெற்றிருந்தன.  ஆசிரியர்கள், மாணவர்கள்,பழையமாணவர்களின் நெறிப்படுத்தலுடன் மிகவும் சிறப்பாக  பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய பழைய மாணவர்களின் சுவாரசியமான சமூக சீர்திருத்த நாடகம்  பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்துவதாய் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக