வியாழன், 20 ஜூன், 2013

துரோணர் வில்வித்தை எனும் வடமோடி மரபுக்கூத்து அரங்கேற்றம் பற்றிய ஓர் பார்வை

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு 19.06.2013ம் திகதி புதன்கிழமை முன்னிரவு 8.00 மணியளவில் துரோணர் வில்வித்தை எனும் வடமோடி மரபுக்கூத்து அரங்கேற்றம்  இடம்
பெற்றது.
              அரசடித்தீவு கலைஞர்களால் புதிதாக பைலப்பட்ட துரோணர் வில்வித்தை எனும் வடமோடி மரபுக்கூத்து இன்றிரவு இடம்பெற்றது. மரபுக்கலைகளை பாதுகாக்கவேண்டியது இன்றைய சமூதாயத்தின் கடமை என்ற அடிப்படையில் அரசடித்தீவு  கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியினால் பதிமூன்று வருடங்களுக்கு பின்னர் இவ்வருடம் இவ் மரபுக்கூத்தினை பையின்று அரங்கேற்றியுள்ளமை சிறப்பான விடயமென எமது பிரதேச பாரம்பியக் கலை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். அருகிக்கொண்டு செல்லுகின்ற புராண இதிகாச பண்பாட்டு அம்சங்களை மீட்டுப் பார்க்கவும் குருகுலக் கல்வி முறையின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்ளவும் குருபக்தியின் மகத்துவத்தை புரிந்துகொள்ளவும் ஒரு சந்தர்ப்பமாக இந்நிகழ்வு அமைந்ததோடு குருமீது பற்றுக்கொண்டு மானசீகமாக கற்றால் வாழ்வில் வெற்றியடையலாம் என்ற வாழ்வியல் தத்துவத்தையும் இவ் மரபுக்கூத்து வெளிப்படுத்தியிருந்தது. 

       இக்கூத்தானது எமது பிரதேசத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஆடப்பட்டமையினாலும் இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலானோர் இக்கூத்தில் இடம்பெற்றிருந்தமையினாலும் எமது பிரதேச மக்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்திருந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக இன்றைய தினம் அரங்கேற்றத்தை பார்வையிடுவதற்காக கலந்து கொண்டிருந்த சனத்திரள் சான்று பகர்கின்றது. இவ் அரங்கேற்ற விழாவின்போது கூத்து கலைஞர்கள் அவ்வப்போது கௌரவிக்கப்பட்டதோடு இக்கூத்தினை நெறியாழ்கை செய்து படிப்பித்துகொடுத்த நாடக ஆசிரியர்கள், மத்தள ஆசிரியர்கள், களரி முகாமையாளர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் போன்றோரும் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக