சனி, 13 ஜூலை, 2013

தாந்தாமலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் - 2013

(வித்தகன்) மட்டக்களப்பு மாவட்டத்திலே மண்முனை தென்மேற்குப் பகுதியிலே கிழக்கின் புனித தலமும், பிரசித்தி பெற்றதும், தொன்மை வாய்ந்ததும், ஆடக சவுந்தரி அரசியாலும் முற்காலத்து முனிவர்கள் பலராலும் “தாண்டகிரி” என்று பெயர் சூட்டி அழைக்கப்பட்டதும் தற்காலத்திலே சின்னக்கதிர்காமம் எனச் சிறப்பாக புகழ்ந்து கூறப்படுவதும் வேண்டுவோருக்கு வேண்டுவதை வாரி வழங்கிஅ ருள் பாலித்து வரும்
தாந்தாமலை அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானின் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நிகழும் விஜய வருடம் ஆனித்திங்கள் 18ம் நாள் (02.07.2013) செவ்வாய்க்கிழமை இரவு ஆலயத்தில் கிராமசாந்தி , வாஸ்துசாந்தி ஆகிய கிரியைகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று ஆனித்திங்கள் 19ம் நாள் (03.07.2013) புதன்கிழமை காலை 08.00 மணிக்கு திருக்கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி ஆடித்திங்கள் 08ம் நாள் (24.07.2013)  புதன்கிழமை காலை 06.00 மணியளவில் திருவோண நட்சத்திர சுபமுகூர்த்த வேளையில் புண்ணிய தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.

        02.07.2013 தொடக்கம் 23.07.2013 வரையான உற்சவ காலங்களில் பகல் பூசைகளும், அதிலும் சிறப்பாக இரவு நேரங்களில் பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமத்து மக்களின் திருவிழாக்கள் அதனோடு கலை நிகழ்வுகள், தமிழ் பாரம்பரியங்களை பின்பற்றும் வடமோடி, தென்மோடி மரபுக் கூத்துக்களும், கதாப்பிரசங்களும், கூட்டுவழிபாடுகளும், அன்னதானமும் சிறப்பாக இடம்பெறும்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக