செவ்வாய், 23 ஜூலை, 2013

பாதயாத்திரையும் முருகன் விக்கிரகம் அன்பளிப்பு நிகழ்வும்

தாந்தாமலை ஶ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியமும்,சிவதொண்டன் அணியினரும் இணைந்து கடந்த 21-07.2013ந் திகதி கோட்டைக் கல்லாறு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தாந்தாமலை
ஶ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டு அன்றிரவு வாழைக்காலை அருள்மிகு ஶ்ரீ பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து 22.07.2013ந் திகதி காலை 10.00 மணியளவில் தாந்தாமலை ஶ்ரீ முருகன் ஆலயத்தை வந்தடைந்து அங்கு முருகப்பெருமானை தரிசித்து கந்தவேல் குகையை நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டனர். அங்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியத்தினால் வேல் மலையில் பிரதிஸ்டை செய்வதற்காக முருகப்பெருமானுடைய திருவுருவச்சிலை தாந்தாமலை ஆலய பரிபாலன சபையிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் திரு நடராசா (நடா), அகில இலங்கை விஸ்வ ஹிந்து பரிசித்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் திரு கமலதாஸ், அம்பாறை மாவட்ட இந்து மாமன்றத்தின் பொதுச்செயலாளர் சரவணபவன்,  தாந்தாமலை ஶ்ரீ முருகன் ஆலயத் தலைவர் திரு.ஞா.துரையப்பா, இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியத்தின் செயலாளர் திரு.S.புஸ்பலிங்கம்,இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் திரு சிவகுருநாதன், இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியத்தின் பிரச்சார செயலாளர் திரு தியாகராஜா உட்பட ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

 கலந்து கொண்ட அடியார்களில் ஒரு தொகுதியினர்

 கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா அவர்கள் விக்கிரகத்தை அன்பளிப்பாக வழங்கும் போது
 அன்பளிப்பாக வழங்கப்பட்ட முருகன் விக்கிரகம்
 கந்த வேல் குகை

வேல் மலையை நோக்கி யாத்திரை
வேல் மலையில் உள்ள வேலாயுதம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக