ஞாயிறு, 14 ஜூலை, 2013

பண்டாரியாவெளி ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் புகழ் கூறும் பக்திப்பாடல்கள் இசைத்தட்டு வெளியீட்டு விழா

(ஜெய்) மட்டக்களப்பு தமிழகத்தில் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகின்ற பண்டாரியாவெளி ஶ்ரீ நாகதம்பிரான் (நாககட்டு) ஆலயத்தின் வரலாற்று அற்புத நிகழ்வு பற்றிய பாடல் வரிகள் அடங்கிய இசைத் தட்டு வெளியீட்டு விழாவானது 16.07.2013 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நாகதம்பிரான் ஆலய முன்றலில்
நடைபெற்றது.

விஸ்வ பிரமஶ்ரீ வை.ஈ.எஸ்.காந்தன் குருக்களின் பாடல் வரிகளுக்கு தென்னிந்திய இசையமைப்பாளர் விமல்ராஜ் அவர்களின் இசையில் விமல், திவாகரன், துஷா (தென்னிந்திய பாடகர்கள்) அவர்களின் குரலில் பாடப்பட்ட ஆறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு இசைத்தட்டாக வெளியிடப்பட்டது. கௌரவ அதிதிகளாக திரு.அருண் தம்பிமுத்து (ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு அமைப்பாளர்),  திரு.இ.சாணக்கியன் (ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர்), ஆன்மீக அதிதிகளாக வை.ஈ.எஸ்.காந்தன் குருக்கள், சிவ ஶ்ரீ குருகுலநாதக் குருக்கள் அவர்களும் கலந்து கொண்டனர்.  இந் நிகழ்வில் பல கிராங்களிலும் இருந்தும் மக்கள் கலந்துகொண்டு இசைத்தட்டை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக