திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கொக்கட்டிச்சோலையில் UTCDA அரிசி ஆலை ஆரம்பம்

2013.08.05 இன்று காலை 10.00 மணிக்கு கொக்கட்டிச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள UTCDA  அரிசி ஆலையில் நெல் குற்றும் நிகழ்வு UTCDA  நிறுவன தலைவர் திரு.அ.கருணாகரன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும்
குடும்பங்களை சேர்ந்த பெண்களின் வாழ்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார மேம்பாடு என்ற கருத்திட்டத்தின் கீழ் அவர்களை இலகு குழுக்களாகக் கொண்டு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் பேரிலும் வேள்ட் விஸன் லங்கா, பட்டிப்பளை ADP யின் வழிகாட்டலின் பேரிலும் UTCDA  நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள UTCDA அரிசி ஆலையின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் கூறுகையில் பிரதேச செயலாளராக பொறுப்பேற்று ஒரு வருடமாக நான் கண்ட கனவு இன்றுதான் நிறைவேறியுள்ளது. இப்பிரதேசத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இவ் அரிசி ஆலையின் நோக்கமாகும், இப்பபணியினை UTCDA  நிறுவனம் சிறப்பாக மேற்கொள்ளும் என நான் நம்புகின்றேன் என்று தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் சிறப்பு அதிதிகளாக வேள்ட் விஸன் லங்கா, பட்டிப்பளை ADP யின் முகாமையாளர் திரு.G.J.அனுராஜ் மற்றும் மக்கள் வங்கியின் கொக்கட்டிச்சோலை கிளை முகாமையாளர் திரு.மோகனதாஸ் அவர்களும், ஆன்மீக அதிதியாக கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சோதிலிங்கம் ஐயா அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர் திரு.புவனேஸ்வரன், பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. கருணாகரன் மற்றும் அரசடித்தீவு ப.நோ.கூ சங்கத்தின் பொது முகாமையாளர் திரு.க.வேல்முருகு ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் வேள்ட் விஸன் லங்கா நிறுவனத்தின் கணக்காளர், திட்ட இணைப்பாளர்கள், UTCDA  நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள், UTCDA  நிறுவனத்தின் திட்ட ஊக்குவிப்பாளர்கள், UTCDA  நிறுவனத்தின் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் UTCDA  அரிசி ஆலையின் பணியாளர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக