வியாழன், 11 அக்டோபர், 2012

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா – 2012


மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 10.10.2012 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுக்களும் சிறப்பான முறையில் நடைபெற்றது. அன்றைய தினம் பழைய மாணவர்களுக்கும் மாணவர்களுக்கும் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் 2ற்கு 0என்ற
அடிப்படையில் மாணவர்கள் அணி;  வெற்றிபெற்றது.

அடுத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடைபெற்ற  கரப்பந்தாட்ட போட்டியில் 2ற்கு 0என்ற அடிப்படையில் மாணவர்கள் அணி வெற்றிபெற்றது.
தொடர்ந்து  மாணவர்கள் இருமருங்கிலும்  அணிவகுத்து நின்று ஆசிரியர்களுக்கு பூமாலை தூவி அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து  மங்களவிளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மாணவர்தலைவரால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. ஆதன் பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களால் பூமாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். பின்னர் ஆசிரியர்களால் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டது. தோடர்ந்து மாணவர்களால் கவிதை, பாடல், பேச்சு, நடனம், போன்ற நிகழவுகள் ஆசிரியர்களையும் அவையோரையும் பிரமிக்கவைக்கும் அளவிற்கு இடம்பெற்றது. வித்தியாலயத்தில் கற்பிக்கின்ற ஆசான்கள் அனைவர்களாலும் நடனம், நாட்டியம், பாடல், சொற்பொழிவு போன்றவை மாணவர்களின் அறிவுத்திறனை தூண்டுகின்ற வகையில் அமைந்திருந்தது.








கவிதைகள்

ஆசான்


கல்வியெனும் மூன்றெழுத்தை
கற்றுத் தந்து கண்ணயராது
மாணாக்களை உயர்த்தும் தலைவன் நீ

பாரினிலே புகழெடுத்து
அறிவு எனும் சுடரெடுத்து
உலகத்தோர் நன் மதிப்பில்
வாழ்ந்து வரும் பாலகன் நீ

பேதையாய் இருந்தவனை
மேதையாய் உயர்த்தி வைத்தாய்
உலகோர் நன் மதிப்பில்
வாழ்வதற்கு வழியமைத்தாய்

கல்லாக இருப்பவரை
கனியாக மாற்றி வைத்தாய்
அன்பு என்னும் வடிவெடுத்து
ஒழுக்கத்தை கற்றுவிப்பாய்

ஆண்டுக்கு ஒரு முறை உந்தன் திருவிழா
ஒக்டோபர் ஆறாம் நாள் அது ஒரு பெருவிழா
அஹிம்சையை இவ்வுலகில் அறவே ஒளித்திடுவாய்
அறிவு என்னும் சுடரெடுத்து காலமெல்லாம் காத்திடுவாய்


ஆண்டுகள் பல கல்வி கற்ற எங்களுக்கு
ஆதரவாய் பதவி என்னும்
மூன்றெழுத்தைக் காட்டிடுவாய்

பாடசாலைக் காலத்தில்
பல்கலை கற்பித்து
பல்கலைக்கலகம் செல்ல
பல வகையில் உதவி செய்வாய்

க~;டபடும் காலத்தில் கலங்காமல்
காத்துவரும் கடவுளைப் போல
நாங்கள் க~;டப்படக் கூடாதென்று
காலமெல்லாம் உன்பணியை ஆற்றி வாறாய்

காலமெலாம் உன்சேவை
தொடரெனுமென வாழ்த்துகிறோம் வாழ்க…
தரம் - 10 
சி.யுதாயினp

மகத்தான ஆசான்களே

மகத்தான ஆசான்களே
மண்ணில் வாழும் மாந்தர் உய்க்க
சாதனைசெய்தாய் நாம் சிறக்க
கல்வியை நாம் தடையறக்கற்க
கருணை கொண்டாய் நாம் சிரிக்க

ஒளியினை ஏற்றி வைத்து
பகுத்தறிவை தூண்டி விட்டு
தரணியிலே ஏற்றி விட்டு
பணி புரிய வழி செய்துவிட்டீர்

பலகாலம் பாடினும் உன் புகழ்
பழமையாய் ஆனதில்லை வம்புகள்
நீ எம்வாழ்வின் அடையாள சின்னங்கள்
உன்னை போற்ற நான் பெறவேண்டும் பல
ஜென்மங்கள்


தி.சிந்துஜன்



வாழ்க வழமுடன்

சிட்டுக்கள் போல் சின்ன வயதினிலே
பட்டுப் பூச்சிகள் நாங்கள் பள்ளிக்கு செல்ல 
சுட்டு விரல் பிடித்து கட்டுப்பாட்டுடன்
கண்மணியாய் கல்வியை கற்றுத்தந்தவரே

நீர் அன்று எம் சுட்டு விரலை
பிடிக்காது விட்டிருந்தால்
நாங்கள் அன்று படிக்காது கெட்டிருப்போம்
படிப்பு உயர்ந்த உலகத்திலே!

படிப்பை இனிப்பாய் தந்த பாலகனே!
பார்புகழ் நீர் வாழ பலமுறை வாழ்த்துகின்றோம்
வாழ்க வளமுடன் என்றும்

ந.துஷாலா
தரம் - 11



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக