ஞாயிறு, 30 டிசம்பர், 2012

மட்டு அரசடித்தீவு விக்னேஸ்வரா படிப்பகத்தின் 5ம் ஆண்டு நிறைவு விழா- 2013


மாணவர்களின் முன்னேற்றம் கருதி எமது பிரதேசத்தின் பிரத்தியேகக் கல்விச் செயற்பாட்டினை மேம்படுத்தும் முதல்முறையாக 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி அரசடித்தீவில் ‘விக்னேஸ்வரா படிப்பகம்’ எனும் பெயரில் பிரத்தியேக கற்கை நிலையம் ஒன்று உள்ளுர், வெளியூர்
வளவாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப் படிப்பகத்தின் 5வது அகவையானது எதிர்வரும் 2013.01.26ம் திகதி சனி அன்று படிப்பகத்தின் பிரதான மண்டபத்தினுள் அதன் முகாமையாளர் திரு.அ.கருணாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ் படிப்பகத்தில் ஆரம்பக்கல்வி பயிலும் தரம் -4, தரம் -5, மாணவர்களுக்கும், இடைநிலை பயிலும் தரம் -6 தொடக்கம் தரம் -11 வரையான மாணவர்களுக்கும் மற்றும் க.பொ.த.உயர்தரத்தில் கலைப்பிரிவு பயிலும் மாணவர்களுக்குமான பிரத்தியேக வகுப்புக்கள் இடம் பெற்று வருகின்றன. இந் நிகழ்வில் விக்னேஸ்வரா படிப்பகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள்;, பழைய மாணவர்கள், கிராம முன்னோடிகள், பிரதேச கல்விமான்கள் மற்றும் பெற்றோர் போன்றோர் கலந்து கொள்ளவுள்ளதோடு, க.பொ.த உயர்தர பரீட்சையில் விசேட சித்தி எய்திய மாணவர்கள் கௌரிக்கப்படவுள்ளதோடு, மாணவர்களிடையே திறன் விருத்தி சார்ந்த போட்டிகளும், பரிசில்கள் வழங்கலும் இடம்பெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக