ஞாயிறு, 30 டிசம்பர், 2012

மட்டக்களப்பு அரசடித்தீவில் நடைபெற்ற திருவம்பாவை வழிபாடு

இவ் உலகை படைத்து அதில் உறைந்து இவ் உலகை இரட்சிக்கும் தேவியாம் எங்கள் ஆதிபராசக்தியின் நன்னாளான திருவாதிரை திருநாள் உலகில் பரந்து வாழும் இந்து மக்களின் வாழ்வில் ஒரு பொன்னான நாள். சக்தியின் அருள் கைகூடப்பெற்ற எம்பெருமான் மாணிக்கவாசகரால் சக்திமீது பாடல்களால்
சொரியப்பட்ட பாமாலைகளே எம்பாவாய் பாமாலையாகும். வாவிமகள் பாடும் மட்டு நகரில் மேற்திசையில் சோலைநாதர் குடிகொண்டு இருக்கும் சோலையூரிற்கு தொலைவில் உள்ள கிராமமாகிய அரசடித்தீவு என்றழைக்கப்படும் அரசையூரின் ஆதிபராசக்தியின் மகத்துவத்தை பறைசாற்றும் வண்ணம் 18.12.2012 திகதி செவ்வாய்கிழமை கோலாகலமாக அன்னையின் அனுகிரகத்துடன் கும்பம் வைக்கும் நிகழ்வு இனிதாய் நடைபெற்றது.

    அன்றிலிருந்து தொடர்ந்து பத்து நாட்கள் சுவாமி மாணிக்கவாசகரால் அன்னைமீது சொரியப்பட்ட அந்த பாமாலையினை பாடி அன்னையின் அருளினைப்பெற உகந்த தினங்களாகும். எமது கிராமம் சற்று அளவில் பெரியது என்பதால் அதிகாலை 2.00 மணியளவில் ஆதிபராசக்தியின் பக்தர்கள் ஒன்றுகூடி திருப்பள்ளி எழுச்சி பதிகத்தை பாடி ஊர் வளைத்து ஏனைய மக்களை துயில் நீங்கு எழுங்கள்> எம் சக்தியின் திருவடியை பணியுங்கள்> என்று கூறும் வண்ணம் அந்த பாமாலை அமையும். இவ்வாறே தொடர்ந்து பத்து நாட்கள் இடம் பெறும். 

    இவ்வாறு அன்னையின் புகழினை பாடி ஊர் வளைக்கும் பக்தர்க்கு தாகம் தீர்க்கும் முகமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெற்று பத்தாவது நாளன்று எம் தேவி மஞ்சள் குளித்து நீராடும் நாள் அன்று கிராமத்தின் அன்மையில் இருக்கும் குளக்கோட்ட மன்னனினால் கட்டுவிக்கப்பட்ட  ‘வில்லு’ குளத்தில் அன்னை தீர்த்தமாட திருவுளங்கொள்வாள். 28.12.2012 வெள்ளிக்கிழமை அதிகாலை பூசையினை தொடந்து மஞ்சள் இடித்த பின்  அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவியை வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அன்னையின் பக்தர்கள்சூழ தீர்தோற்சவம் இடம்பெற்றது. அன்றய தினம் பிற்பகல் 2.00 மணியளவில்  நன்கு அலங்கரிக்கப்பட்ட பொன்னூஞ்சலில் தேவியை வைத்து 60 பாடல்கள் இசைக்கப்பட்டு மழலைகளால் பொன்னூஞ்லாட்டும் நிகழ்வுடன் இனிதே நிறைவுற்றது.    








                           


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக