சனி, 27 ஏப்ரல், 2013

பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு  அணிக்கு ஒன்பது பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டது.கடந்த வாரம் பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற
இச்சுற்றுப்போட்டிகளில்  சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.  இப்போட்டியில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியானது 1ம் சுற்றில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா  B அணியினரையும்  இரண்டாவது சுற்றில் பன்சேனை உதயொளி அணியினரையும் காலிறுதிப் போட்டியில் மகிழடித்தீவு மகிழை அணியினரையும் அரையிறுதியில் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினரையும் 5க்கு 3 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
இறுதிப்போட்டியில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா  A அணியினரை தண்டை உதை மூலம்  5க்கு 3 என்ற கோல்கள் அடிப்படையில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி வெற்றியீட்டியது. இப்போட்டியில் சிறந்த வீரராக கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணிவீரர் கேதீஸ் அவர்களும், சிறந்த கோல் காப்பாளராக அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி வீரர் க.கவிசங்கர் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற முதலாம் இரண்டாம் மூன்றாம் அணியினருக்கும் சிறந்த வீரர்களுக்கும் வெற்றிக் கிண்ணமும் பெறுமதியான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக