சனி, 27 ஏப்ரல், 2013

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் மாற்றத்திற்கான செயற்த்திட்டம் -2013

பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் மாற்றத்திற்கான சூழலை நோக்கிய கதை சொல்லி திட்டத்தின் ஓர் அங்கமாக  மட்டக்களப்பு முதலைக்குடா  மகா வித்தியாலயத்தில் ஏப்ரல் 19ம் திகதி  காலை 10.30 தொடக்கம் மதியம் 1.30 வரை  மாணவர்
விழிப்பூட்டல் செயலமர்வு இடம்பெற்றது.  இச் செயலமர்வில் தரம் 10, 11ல் கல்வி கற்கும் 30ற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இச் செயலமர்வில்  மாணவர்களுக்கு இருக்கின்ற கற்பனை ஆற்றல்,  விமர்சனம்  எழுதுகின்ற திறன் என்பவற்றை வெளிக்கொணரும் ஓர் அங்கமாக இச் செயலமர்வு இடம்பெற்றது. இதில் பெறப்பட்ட அடைவு மட்டங்களாக மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களிடம் மறைந்திருந்த ஆற்றல்களை வெளிப்படுத்தினர். மேலும் இவ்வகையான செயற்திட்டம் எதிர் காலத்தில் இடம்பெறுமாயின் ஏனைய மாணவர்களும் தங்களது ஆளுமைகளை வெளிக்கொணர முடியும் என மாணவர்கள் கருத்துக்கள்  தெரிவித்தனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக