செவ்வாய், 18 டிசம்பர், 2012

அடை மழை காரணமாக படுவான்கரை பிரதேச மக்கள் இடம் பெயர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அடை மழை காரணமாக பல்வேறு பிரதேச பிரிவுகளில் இருந்தும் கிராம மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. படுவான்கரை பிரதேசத்தைச் சேர்ந்த போரதீவுப்பற்று (வெல்லாவெளி) மன்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) மன்முனை மேற்கு
(வவுணதீவு) போன்ற பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். அதிலும் பட்டிப்பளை பிரதேச பிரிவிலுள்ள பன்டாரியாவெளி படையாண்டவெளி கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அண்டிய கிராமமான கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் மூலம் உலர் உணவு வழங்கப்பட்டு சமைப்பதற்கான பாத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மழை தொடரும் பட்சத்தில் மகிழடித்தீவு, பட்டிப்பளை, அரசடித்தீவு, அம்பிலாந்துறை போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கும் நிலை காணப்படுகிறது.

கொக்கட்டிச்சோலை சந்தை

பன்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வீதி

பன்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வீதி

                                                      பன்டாரியாவெளி வீதி


கொக்கட்டிச்சோலை ஊடாக மணற்பிட்டி செல்லும் களிக்கட்டு வீதி

                                                                            அரசடித்தீவு ஊடாக கடுக்காமுனை செல்லும் வீதி


வட்டிக்கட்டு வீதி


கொக்கட்டிச்சோலை ஊடாக மணற்பிட்டி செல்லும் களிக்கட்டு வீதி

                                                           கொக்கட்டிச்சோலை ஊடாக மணற்பிட்டி செல்லும் களிக்கட்டு வீதி

                                                         கொக்கட்டிச்சோலை ஊடாக மணற்பிட்டி செல்லும் களிக்கட்டு வீதி







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக