ஞாயிறு, 31 மார்ச், 2013

"மண் கமழும் மங்கல விழா"வின் இறுதி நாளில் எமது மண் வாசனையின் மகிமை சொட்டும் கலாசார ஊர்வலம்


எமது பிரதேசத்தின் கலைகளையும் கலைப் படைப்பாளிகளையும் கட்டிக் காத்து வளம்பெறச் செய்யவும் சமூக ஐக்கியம், ஒருமைப்பாட்டை முன்னெடுப்பதற்காகவும் தனதுசெயற்பாட்டை மேற்கொள்ளும் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்  3வது "மண் கமழும் மங்கல விழா" 31.03.2013
அதாவது  இன்று பெரு விமர்சையாக பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

      கவிஞர் த.மேகராசா வின் தலைமையில் முதல் நிகழ்வாக எமது மண் வாசனையின் மகிமை சொட்டும் கலாசார ஊர்வலம் பட்டிப்பளை சந்தியில் இருந்து கலாசார மண்டபத்தை வந்தடைந்தது. இதில் மாட்டு வண்டி சவாரி, கோலாட்டம், கும்மி, கரகம், வசந்தன், குரவை, காவடி நடனம், சுளகு நடனம், இனியம் என்பன பல அம்சங்கள் இடம்பெற்றன. 

      இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் திரு மலர்ச்செல்வன் அவர்களும் கோட்டக்கல்வி அதிகாரி திரு. ந. தயாசீலன் அவர்களும் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாரம்பரிய முறையில் அலங்கரிக்கப்பட்ட அரங்கில் பல கிராமிய கலை நிகழ்ச்சிகளும், கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.

இதில் திரு த. ரவிராஜ் (மாவூரான்) இவருக்கு “கிராமிய கலைச்சுடர்” (கவிதை) விருது வழங்கப்பட்டது. 

இளையதம்பி நேசம்மா (மருத்துவிச்சி) இவருக்கு “கிராமிய கலைச்சுடர்” விருது வழங்கப்பட்டது. 

திரு. கறுவத்தம்பி அழகிப்போடி இவருக்கு “கிராமிய கலைச்சுடர்” விருது வழங்கப்பட்டது. 

திரு. பாலிப்போடி நல்லதம்பி இவருக்கு “கிராமிய கலைச்சுடர்” (வசந்தன் கூத்து) விருது வழங்கப்பட்டது. 

திரு. கனகசபை சந்தோசம் இவருக்கு  “கிராமிய கலைச்சுடர்” (மரபுக்கூத்து) விருது வழங்கப்பட்டது. 

திரு. கந்தப்போடி சிவநேசன் இவருக்கு “கிராமிய கலைச்சுடர்” (ஓவியம்) விருது வழங்கப்பட்டது.

திரு. கதிர்காமப்போடி மாணிக்கப்போடி இவருக்கு “கிராமிய கலைச்சுடர்” (என்பு முறி வைத்தியம்) விருது வழங்கப்பட்டது.

செல்வி. குணரெத்தினம் டிலாணி இவருக்கு “இளங்கரகக் குயில்” (கரகம்) விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து மண் கமழும் மங்கல சிறப்பு மலர் “முகவரி” நூல் வெளியிடப்பட்டது. பி.ப ஒரு மணியளவில் விழா இனிதே நறைவுபெற்றது. இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டது  குறிப்பிடதக்கது.






























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக