வியாழன், 7 மார்ச், 2013

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா அறநெறிப் பாடசாலையின் கல்விச் சுற்றுலா - 2013


அரசடித்தீவு விக்னேஸ்வரா அறநெறிப் பாடசாலையின் கல்விச் சுற்றுலாவானது 03.03.2013 ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வரா அறநெறிப் பாடசாலையின் அதிபர் திரு.சி.ருசகுமார் தலைமையில் காலை 6.00 மணியளவில் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இருந்து இரண்டு
பேருந்துகளில் ஒழுங்கு செய்யப்பட்டு கல்விச் சுற்றுலாவானது ஆரம்பமானது. இதில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அறநெறிப் பாடசாலை மாணவர்கள் 111 பேரும், ஆசிரியர்கள் 10 பேரும், பெற்றோர்கள் சார்பாக 15 பேருமாக மொத்தமாக 136 பேரினை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
       இக் கல்விச் சுற்றுலாவின் நோக்கமானது இந்து சமயத்துடன் தொடர்புடைய புராதன பண்டைய இடங்களை மாணவர்களுக்கு நேரடியாக காண்பித்து விளக்கமளிப்பதே இதன் நோக்கமாகும்.
இதன்படி சுற்றுலாவின் முதலாவது இடமாக மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி அம்மன் ஆலயத்தினை மாணவர்களுக்கு அதன் தோற்றம், அமைவிடம், தீர்த்தம் என பல அம்சங்கள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தினையும் காண்பிக்கப்பட்டது. அவ் ஆலயத்திலே மாணவர்களுக்கு காலை ஆகாரம் வழங்கப்பட்டது.
        அதனைத் தொடர்ந்து கல்விச் சுற்றுலாவின் மூன்றாவது இடமாக திருகோணமலையில் இயற்கையாகவே அமைந்திருக்கும் திருகோணமலை இயற்கை துறைமுகத்தினை பார்வையிட்டனர். திருகோணமலை துறைமுகம் அற்புதமான மற்றும் பாதுகாப்பான இயற்கை துறைமுகமாகும். இங்கு பாறைகளும் நிலங்களும் சூழ அமைந்திருப்பதுமட்டுமல்லாமல் இயற்கையாகவே ஆழம் அதிகமான துறைமுமாகும். சுற்றிலும் நிலங்கல் இருப்பதாலும் ஆழம் அதிகம் இருப்பதாலும் நீர்மூழ்கி கப்பல்கள முதல் சாதாரண கப்பல்கள் வரை இங்கே பாதுகாப்பாக தரித்துநிற்கமுடியும்.
     பின்னர் நான்காவது இடமாக கிண்ணியா வெந்நீர் ஊற்று காண்பிக்கப்பட்டது. கன்னியா வெந்நீரூற்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை  வெந்நீரூற்று ஆகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 - 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில்இ நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும். தமிழ் வரலாற்றின் படிஇ பத்துத் தலை படைத்த இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும் ஐதீகம் உண்டு. உல்லாசப் பிரயாணிகளைக் மிகவும்கவரும் இடமாக கவர்துள்ளது.
       ஐந்தாவது இடமாக திருகோணமலை ஸ்ரீ விஷ்ணு ஆலயம் இவ் ஆலயமானது தென்னிந்திய ஆலய அமைப்போடு திராவிட பாணியில் அமைக்கப்பட்ட சிறப்புப்பெற்ற விஷ்ணு ஆலயமாகும்.
         ஆறாவது இடமாக திருக்கோணேச்சர ஆலயமும் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. ஒல்லாந்தர், ஆங்கிலேயர், போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பிரட்ரிக் கோட்டை மேற்கத்தைய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாகஉள்ளது.தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கோயிலும் இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும். இது கி.பி ஏழாம் நூற்றாண்டில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். 
        இக் கல்வி சுற்றுலாவில் இறுதியாக திருகோணமலை பளிங்கு கடற்கரையினை பார்வையிட்டதுடன் மாணவர்கள் குதூகலத்துடன் நீராடி விட்டு இரவு  10.00 மணியளவில் கிராமத்தை வந்தடைந்தனர்.
தகவல் -துருசந்-










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக