வியாழன், 7 மார்ச், 2013

அரசடித்தீவு, அரசடித்தீவு வடக்கு விக்னேஸ்வரா இளைஞர் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் - 2013


அரசடித்தீவு விக்னேஸ்வரா இளைஞர் கழகத்தின் பொதுக்கூட்டமானது 06.03.2013 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் இளைஞர் கழகத் தலைவர் செல்வன்.க.பகிரதன் அவர்களின் தலைமையில் இரண்டு நிமிட மௌன இறைவணக்கத்துடன்
ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக தலைவர் உரை இடம்பெற்றது. அவர் தனதுரையில் இளைஞர் கழகத்தின் செயற்பாடுகள் பற்றியும் 2013ம் ஆண்டிற்கான இளைஞர் கழக செயற் திட்டங்கள் பற்றியும் கூறி தனதுரையை நிறைவு செய்தார். தொடர்ந்து செயலாளர் அவர்களினால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. 
        அதனைத் தொடர்ந்து 2013ற்கான புதிய நிருவாக சபை தெரிவு இடம்பெற்றது. இதில் முதலாவதாக செயலாளர் தெரிவு இடம்பெற்றது. புதிய செயலாளராக செல்வன்.ம.சந்திரகுமார் அவர்களை செல்வன். வெ.சௌந்தராசா முன்மொழிய இ.குகதீஸ்வரன் வழிமொழிந்தார் இதனை ஏகமானதாக சபையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
             அதனைத் தொடர்ந்து தலைவர் தெரிவு இடம் பெற்றது. புதிய தலைவராக செல்வன்.ப.பகிரதன் அவர்களை செல்வன்.யோ.சோபனதாஸ் முன்மொழிய செல்வன்.இ.துலாஞ்சலிநாதன்; அவர்கள் வழிமொழிய அதனை சபையோர் ஏகமானதாக ஏற்றுக்கொண்டனர்.
           அதனைத் தொடர்ந்து பொருளாளர் தெரிவு இடம்பெற்றது. புதிய பொருளாளராக செல்வன்.பே.டினேஸ்கரன் அவர்களை கோ.அஜந்தன் அவர்கள் முன்மொழிய பா.பகிரதன் அவர்கள் வழிமொழிந்தார் அதனை சபையோர் ஏகமானதாக ஏற்றுக்கொண்டனர். புதிய அமைப்பாளர்களாக வெ.சௌந்தராஜன் அவர்களும் உபதலைவராக பொ.கலாகரன் அவர்களும் உபசெயலாளராக சி.சோபனா அவர்களும் முக்கிய பதவிகளுக்காக சபையோரால் ஏகமானதாக  தெரிவுசெய்யப்பட்டனர். தொடர்ந்து அலுவலகப் பிரிவு பொறுப்பார்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அந்தவகையில் விளையாட்டு மற்றும் பன்முக வெளிக்கள செயற்பாட்டிற்கு நே.றீகன் அவர்களும்;, கலாசாரம் மற்றும் அறிவிப்புத்துறைக்கு மே.தசேந்தன் அவர்களும், கல்வி மற்றும் தொழில்துறைக்கு வ.கிருசாந்தன் அவர்களும், கணக்கு பரிசோதகராக செ.கேகலாதேவி அவர்களும் சபையோரால் ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்டனர். 
           அடுத்ததாக ஆலோசனைக் குழு தெரிவு இடம்பெற்றது. ஆலோசகர்களாக தே.பவளசிங்கம் அவர்களும் ந.நிசாங்கன் அவர்களும் த.பவநிதன் அவர்களும் ச.காமராஜ் அவர்களும் த.பிறேமலதா அவர்களும் ஏகமானதாக சபையோரால் தெரிவுசெய்யப்பட்டனர்.
               
            அடுத்த நிகழ்வாக அரசடித்தீவு வடக்கு விக்னேஸ்வரா இளைஞர் கழக புதிய நிருவாக சபை தெரிவு இடம்பெற்றது. புதிய செயலாளராக செல்வன்.பு.சதிஸ்குமார் அவர்களை செல்வன்.மு.பத்மபிரியன் முன்மொழிய இ.ஜீவதாஸ்  வழிமொழிந்தார் இதனை ஏகமானதாக சபையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
            அதனைத் தொடர்ந்து தலைவர் தெரிவு இடம் பெற்றது. புதிய தலைவராக செல்வன்.சு.ராகுலன் அவர்களை செல்வன்.கி.கோகுலதாஸ் முன்மொழிய செல்வன்.க.கவிசங்கர் அவர்கள் வழிமொழிய அதனை சபையோர் ஏகமானதாக ஏற்றுக்கொண்டனர்.
     அதனைத் தொடர்ந்து பொருளாளர் தெரிவு இடம்பெற்றது. புதிய பொருளாளராக செல்வன்.யோ.கேதீஸ்வரன் அவர்களை இ.லெவந்தன்; அவர்கள் முன்மொழிய லி.ஜெயரூபன் அவர்கள் வழிமொழிந்தார் அதனை சபையோர் ஏகமானதாக ஏற்றுக்கொண்டனர். புதிய அமைப்பாளர்களாக இ.இராகுலன் அவர்களும் உபதலைவராக இ.கோகுலதாஸ் அவர்களும் உபசெயலாளராக கி.துஷேந்தினி அவர்களும் முக்கிய பதவிகளுக்காக சபையோரால் ஏகமானதாக  தெரிவுசெய்யப்பட்டனர். தொடர்ந்து அலுவலகப் பிரிவு பொறுப்பார்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அந்தவகையில் விளையாட்டு மற்றும் பன்முக வெளிக்கள செயற்பாட்டிற்கு க.கவிசங்கா அவர்களும், கலாசாரம் மற்றும் அறிவிப்புத்துறைக்கு மு.பத்மபிரியன் அவர்களும், கல்வி மற்றும் தொழில்துறைக்கு இ.லெபந்தன் அவர்களும், கணக்கு பரிசோதகராக இ.ஜீவதாஸ் அவர்களும் சபையோரால் ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்டனர். 
அடுத்ததாக ஆலோசனைக் குழு தெரிவு இடம்பெற்றது. ஆலோசகர்களாக சி.வாலசேகரம் அவர்களும், கி.துலாஞ்சலிநாதன் அவர்களும், சி.பார்தீபன் அவர்களும் கி.சிவராஜ் அவர்களும் லி.ஜெயரூபன் அவர்களும் ஏகமானதாக சபையோரால் தெரிவுசெய்யப்பட்டனர்.

     தொடர்ந்து பட்டிப்பளை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் அவர்களினால் கருத்து கூறப்பட்டது. அவர் தனதுரையில் இவ் இளைஞர் கழகங்களின் செயற்பாடுகள் பற்றி பாராட்டியதோடு இவ் இளைஞர் கழகங்களானது மேலும் சேவைகளை திறம்பட மேற்கொள்ள தனது வாழ்த்துக்களை கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். தொடந்து செயலாளர்களின் நன்றியுரையுடன் மாலை 6.00 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவுற்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக