வியாழன், 7 மார்ச், 2013

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நடமாடும் சேவையால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி


கொக்கட்டிச்சோலை பொலிஸ் நடமாடும் சேவை யால் பண்டாரியாவெளி கிராமத்தில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது. இச் சுற்றுப்போட்டியில் ஏழு விளையாட்டுக்கழகங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தன. முதலாவது சுற்றில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினருக்கும்
முனைக்காடு ராமகிருஷ்ணா அணியினருக்கும் நடைபெற்ற போட்டியில் 2 : 0 என்ற அடிப்படையில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் அரையிறுதி சுற்றிற்க்கு தெரிவாகினர்.
   இரண்டாம் சுற்றில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினருக்கும் பண்டாரியாவெளி நாகர் அணியினருக்கும் நடைபெற்ற போட்டியில் 1 : 0 என்ற அடிப்படையில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரை வீழ்த்தி பண்டாரியாவெளி நாகர் அணியினர் அரையிறுதி சுற்றிற்க்கு தெரிவாகினர்.
       மூன்றாம் சுற்றில் முதலைக்குடா விநாயகர் அணியினருக்கும்  பட்டிப்பளை வைரவர் அணியினருக்கும் நடைபெற்ற போட்டியில் 3 : 1 என்ற அடிப்படையில் முதலைக்குடா விநாயகர் அணியினரை தோற்கடித்து பட்டிப்பளை வைரவர் அணியினர் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகினர். 
    நான்காம் சுற்றில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினருக்கும் பண்டாரியாவெளி நாகர் அணியினருக்கும் நடைபெற்ற போட்டியில் பண்டாரியாவெளி நாகர் அணியினரை 2 : 0 என்ற அடிப்படையில் பின்தள்ளி அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் கால் இறுதி சுற்றிற்கு முன்னேறினர்.
         ஐந்தாம் சுற்றில் பட்டிப்பளை அணியினருக்கும் அம்மிளாந்துறை கதிரவன் அணியினருக்கும் நடைபெற்ற போட்டியில் பட்டிப்பளை அணியினரை 1 : 0 என்ற அடிப்படையில் வீழ்த்தி அம்பிளாந்துறை கதிரவன் அணியினர் கால் இறுதி சுற்றிற்கு முன்னேறினர்.
         இறுதிச்சுற்றுப் போட்டியானது மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகியது. இப் போட்டியில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினருக்கும் அம்பிளாந்துறை கதிரவன் அணியினருக்கும் மிகவும் விறுவிறுப்பாக முறையில் நடைபெற்ற போட்டியானது போதியளவு வெளிச்சம் இல்லாமையினால் இரண்டு அணியினரின் சம்மதத்தோடு தண்ட உதை (பெனாட்டி) முறையில் நடாத்துவதென நடுவர் ஏற்றுக்கொண்டார். தண்ட உதை சுற்றில் மிகவும் தந்திரமாகவும் நுட்பத்துடனும் இரண்டு அணியினரும் திறமைகளை வெளிக்காட்டினர். இச் சுற்றில் அம்பிளாந்துறை கதிரவன் அணியினரை 5 : 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் வெற்றி வாகை சூடினர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக