புதன், 3 ஏப்ரல், 2013

பட்டிப்பளை பிரதேசத்தில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பம்


பட்டிப்பளை பிரதேச மக்களின் ஜீவனோபாய தொழிலாக விவசாயம் காணப்படுகிறது. விவசாய செய்கையானது சிறுபோகம் பெரும்போகம் என இரு கால வெளியில் செய்யப்பட்டு வருகின்றது குறிப்பிடதக்கது. இவ்வருடம் பங்குனி மாத ஆரம்பப்பகுதியில் இருந்தே
சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. குளத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை நம்பி சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி புழுக்குணாவைக்குளம், கடுக்காமுனைக் குளம், அடைச்சகல்குளம் போன்றவற்றில் இருந்து நீர் பெறப்பட்டு வேளாண்மை செய்கை இடம்பெற்றுவருகிறது. இதில் இம்முறை 4470 ஏக்கர்  நெற்காணிகளில் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை  தை, மாசி மாதங்களில் எமது பிரதேசத்தில் பெய்த பெருமழை காரணமாக நெற்செய்கை காலம் தாழ்த்தி மேற்கொள்ளப்பட்டு வருவதை குறிப்பிடலாம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக