ஞாயிறு, 23 ஜூன், 2013

இளங்கதிர் கலாமன்றத்தின் 38வது ஆண்டு நிறைவு நிகழ்வின் பதிவுகள்

மட்டக்களப்பு அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின்  இறுதி நாள் திருச்சடங்கினை முன்னிட்டும் இளங்கதிர் கலாமன்றத்தின் 38வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் இடம்பெற்ற "முத்தமிழ் சங்கமம்'' விழாவானது திரு.த.பேரின்பராசா (மன்றத்தலைவர்) அவர்களின் தலைமையில்
அம்மன் கலையரங்கில் 22.06.2013ம் திகதி  சனி இரவு 10.30 மணியளவில் ஆரம்பமாகி அதிகாலை 3.00 மணியளவில் நிறைவடைந்தது.

          இந் நிகழ்வின் எம்மண்ணின் பல்லாயிரம் கலை உள்ளங்களை கொள்ளை கொண்ட இளங்கதிரின் கலைப்படைப்புக்கள் இவ்வருடமும் அனைத்து கலை உள்ளங்களின் நெஞ்சைத் தொட்டுச்சென்றது. தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தும், கவிஞர் திரு மேராவின் வாழ்த்துக் கவியும், திரு.G.ஶ்ரீநேசன்(பிரதிக்  கல்விப் பணிப்பாளர் மட்டக்களப்பு மேற்கு) அவர்களின் சிறப்புரையுடன்  நிகழ்வின் முக்கிய அம்சமாக இளங்கதிர் கலா மன்றத்தின் மூத்த உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.  நிகழ்வின் அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரி தாயின் புகழ் கூறும் கொட்டுங்க..கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க.. என்று ஆரம்பிக்கும் அனைவரையும் கொள்ளை கொள்ளும் இனிமையான பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இப்பாடலிற்கு மன்றத்தின் தலைவர் திரு.த.பேரின்பராசா அவர்களின்  வரியுடன் தீபம் இசைக்குழுவின் ஜூட் நிறோஷன் அவர்களின் இசையுடன் மன்ற உறுப்பினரின்  குரலில் அமைந்திருந்தது. இறுதியாக மன்றச் செயலாளர் க.பகீரதன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுபெற்றது.
















1 கருத்து: