செவ்வாய், 3 ஜூலை, 2012

மகிழடித்தீவு பொது மைதானத்தில் நடைபெற்ற காற்பந்தாட்ட சுற்று போட்டியில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி அபார வெற்றி


கொக்கட்டிச்சோலை பிரதேச 8ம் ராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டிலும் HUTCH ரெலிக்கொம் நிறுவனத்தின் பிரதான அனுசரணையிலும் 30.06.2012  அன்று மகிழடித்தீவு பொது மைதானத்தில் நடைபெற்ற அணிக்குப் பதினொரு பேர் கொண்ட மாபெரும் காற்பந்தாட்ட சுற்று போட்டியில் 8

அணிகள் கலந்து சிறப்பித்தன. 

இதில் முதலாம் சுற்றில் முனைக்காடு ராமகிஸ்ணா அணியினை வீழ்த்தி அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் இரண்டாம் சுற்றுக்கு  முன்னேறினர் .

இரண்டாம் சுற்றில் முதலைக்குடா விநாயகர் அணியினை வீழ்த்தி அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர்  இறுதிச் சுற்றுக்கு தெரிவானது. 

இறுதிச் சுற்றுப்போட்டியில் கரையாக்கந்தீவு காந்தி அணியினை எதிர்கொண்டு  4 - 0 என்ற கோல் கணக்கில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி அபார வெற்றியீட்டியது.

வெற்றியீட்டிய விக்னேஸ்வரா  அணியினருக்கு வெற்றிக் கிண்ணமும் 10.000 ரூபாய் பணப் பரிசும் வழங்கப்பட்டது.

சிறந்த ஆட்டநாயகனாக விக்னேஸ்வரா அணியின் குகன் தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த கோல் காப்பாளராக விக்னேஸ்வரா அணியின் கனகலிங்கம் கவிசங்கர்  தெரிவுசெய்யப்பட்டார். 

இவ் அணியில் கலந்து கொண்ட ஏனைய வீரர்களுக்கும் நினைவு கேடையங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவ் ஆண்டில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினருக்கு கிடைத்த ஆறாவது வெற்றிக்கிண்ணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக