புதன், 24 அக்டோபர், 2012

மட் /அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வாணி விழா


நவராத்திரி விழாவில் இன்று கல்விக்கு அதிபதியான ஸ்ரீ சரஸ்வதி தேவிக்குரிய நாளாகும். மாணவ மாணவிகள் பாடசாலை செல்லும் மாணவர்கள் கட்டாயம் சரஸ்வதியை பூஜிக்க  வேண்டிய நாள் இதுவாகும். அதன் அடிப்படையில் நவராத்திரி விழாவின் இறுதி மூன்று நாட்களும் கல்விச்
செல்வத்தைத் தரும் சரஸ்வதிக்காக
நடாத்தப்படுகின்றது. அந்தவகையில் இன்று அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக வாணி விழா நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் ‘வித்யாரம்பம்’ எனப்படும் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. 10.00 மணிக்கு பாடசாலை மாணவர்களால பஜனை நிகழ்வு பாடப்பட்டு அதனைத்தொடர்ந்து 1.00 மணிக்கு தேவிக்கு ஆராதனைகளும் சிறப்பு பூசைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக