திங்கள், 17 டிசம்பர், 2012

படுவான்கரை பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

மட்டக்களப்பு பிரதேசமெங்கும் பெய்து வரும் அடை மழை காரணமாக படுவான்கரை பிரதேசத்தில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி, போன்ற தாழ்ந்த நிலங்களைக் கொண்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன்
மழையுடன் வீசிய காற்றில் பல வீடுகளின் கூரைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும்  வயல் நிலங்களும்
நீரில் மூழ்கியுள்ளன. அரசடித்தீவையும் வால்க்கட்டையும் இணைக்கும் வட்டிக்கட்டு வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை தொடரும் பட்சத்தில் மேற்படி கிராம மக்கள் இடம் பெயர வேண்டிய அவல நிலை ஏற்படும். அத்துடன் மண்முனை பாலம் போடும் வேலைகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் பாலத்துக்காக போடப்பட்ட மண் வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது. அதே நேரம் அரசடித்தீவு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள நாலாம் கான் வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வந்தது அது முற்றாக சேதமடைந்துள்ளது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக