ஞாயிறு, 9 டிசம்பர், 2012

பட்டிப்பளை பிரதேச முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வின் புகைப்படம்.

முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வு கடந்த 06.12.2012 அன்று வியாழக் கிழமையன்று அரசடித்தீவு முன்பள்ளி மண்டபத்தில் மேற்படி நிகழ்வு திரு.எஸ்.ருசகுமார் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வானது அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி, கடுக்காமுனை,
மாவடிமுன்மாரி, பனிச்சையடிமுன்மாரி,
நாற்பதுவெட்டை, தாந்தாமலை, கச்சுக்கொடி சுவாமிமலை முன்பள்ளி சிறார்கள் கலந்து கொண்டனர். தலைமையுரையாற்றிய திரு.எஸ்.ருசகுமார் அவர்கள் பேசும் போது இந்த நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெற்று வந்தாலும் இம்முறை சிறப்பான முறையில் பாண்ட் வாத்தியம் இசைக்கப் பட்டு வரவேற்பு நிகழ்த்தப்பட்டது ஒரு சிறப்பான விடயம் என்றும், அரசடித்தீவு விக்னேஸ்வரா முன்பள்ளி பாடசாலை கூரை ஓடுகள் சேதமுற்ற நிலையில் இருப்பதையும் மழை காலத்தில் சிறார்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதையும்,எழுபதுக்கு மேற்பட்ட சிறார்கள் கல்வி கற்று வருவதையும், ஆனால் ஒரேயொரு ஆசிரியைதான் முன்பள்ளித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு நிரந்தர ஆசிரியையாக இருப்பதையும் இன்னுமொரு ஆசிரியையும் நிரந்தரமாக உள்வாங்கப்பட்டால் மிகவும் நல்லது என்றும் இவைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நிறைவேற்றித் தரும்படியும் கேட்டுக் கொண்டார். அடுத்து பிரதம அதிதிகள் வரிசையில் வேள்ட் விசன் பட்டிப்பளைப் பிரதேச முகாமையாளர் திரு. அனுராஜ் அவர்கள் வருகை தராததால் அவருக்குப் பதிலாக வருகை தந்திருந்த திட்ட இணைப்பாளர் திரு.எஸ்.அமுதராஜ் கருத்துக்கள் கூறும் போது வேள்ட் விசன் கடந்த 8 வருடங்களாக பட்டிப்பளைப் பிரதேசத்தில் இயங்கி வருவதையும் 16 முன்பள்ளிகளை நிருவகித்து வருவதையும் அவைகளை கட்டம் கட்டமாக மக்களே நிருவகிக்கும், நடாத்தும் திறமைகளை வளர்க்க வேண்டும் எனவும் அதற்கான விழிப்புனர்வுகளை உலக தரிசன அபிவிருத்தி ஒன்றியத்தினூடாக மக்களுக்கு ஏற்படுத்தி வருவதையும் சுட்டிக் காட்டினார். முன்பள்ளிகள் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சிறப்பாக தயார் படுத்தும் கல்விக் கூடங்களாக விளங்குகிறது. இதை நகரப் பகுதி மக்கள் நன்றாக விளங்கிக் கொண்டு சிறப்பான ஒத்துழைப்பை முன்பள்ளிகளுக்கு வழங்கி வருகின்றனர் என்பதையும் கூறினார். அடுத்து பிரதம அதிதிகள் உரையில் மண்முனை தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு.த.பேரின்பாசா கருத்துக் கூறுகையில் நடந்து கொண்டிருக்கும் கலை நிகழ்வுகளைப் பார்க்கும் போது மிகவும் பிரயத்தனமாக சிறார்களை பயிற்றுவித்து நெறிப்படுத்தியிருப்பது புரிகிறது என்றும் கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைப் பாராட்டினார். ஏதிர் காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்கக் கூடிய சிறார்களை காணக் கூடியதாக இருப்பதில் மகிழ்வாக இருக்கிறது என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரதம அதிதிகளில் ஒருவரான மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய முன்பள்ளி உதவிப் பணிப்பாளர் திரு.எஸ்.கணேஸ் கருத்துக் கூறுகையில் வீட்டுச் சூழலில் இருந்து சிறார்களை சமூகத்துடன் இணைக்கும் பாலமாக முன்பள்ளிகள் விளங்குகின்றன என்று கூறினார். அதைத் தொடர்ந்து சிறப்பு அதிதிகளாகக் கலந்த கொண்டவர்களின் வரிசையில் திரு.எஸ்.சத்தியநாயகம் (CRP சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் பிரதேச செயலகம் பட்டிப்பளை)  கருத்துக் கூறுகையில் கலை கலாசார நிகழ்வுகள் மூலம் சிறார்களை சமூகத்துடன் இணைக்கும் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானது. அதற்காக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி கூறுகின்றேன். அத்துடன் மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் பட்டிப்பளை முன்பள்ளி நடவடிக்கைகளையும், செயற்பாடுகளையும் சிறப்பாகக் கூறியுள்ளார் எனக் கூறினார். அடுத்து கௌரவ அதிதியாக கலந்து கொண்ட திரு.மா.ககேசரெத்தினம் (அதிபர் மட்/மாவடிமுன்மாரி அ.த.க பாடசாலை) கருத்து தெரிவிக்கையில் இந் நிகழ்வானது சென்ற வருடங்களைவிட இவ் வருடம் சிறப்பான முறையில் நடைபெற்றமை மகிழ்ச்சிகரமானதொரு விடயம் எனவும் இதற்கு சிறார்களை ஊக்கமளித்த ஆசிரியர்கள் பாராட்டுக்கும் கௌரவத்துக்கும் உரியவர்கள் மேலும் பெற்றோர்கள் இச்சிறார்களை மேலும் வழிநடத்தி இவர்களது வாழ்வு வளம்பெற ஆக்கமும் ஊக்கமும் வளங்க வேண்டுமெனவும் கூறினார். அடுத்து சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட திரு.அ.கருணாகரன் (உலக தரிசனம் சிறுவர் அபிவிருத்தி ஒன்றியம்) அவர்கள் கூறியதாவது இந் நிகழ்வானது முன்பள்ளி சிறார்களிடையே இலைமறைகாயாய் ஒழிந்திருக்கும் திறைமைகளை வெளிகொணர்வதற்கு ஒரு நல்ல களமாக இது அமையும் எனவும் ஆசிரியர்கள் இரவு பகல் பாராது தங்களது சேவையை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தியிருப்பது இந்த நிகழ்வுகள் ஊடாக காணக்கூடியதாக இருந்தது என கூறினார்.


























2 கருத்துகள்: