வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வீட்டு அமைப்பு என்பது பற்றி ஆசிரியர்கள் நேரடியாக காண்பித்து விளக்கம்

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் 1ல் கல்வி பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு அமைவாக 21.02.2013அன்று வீட்டு அமைப்பு, வீட்டுச் சூழல், செல்லப்பிராணிகள், வீட்டில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் என்பன தொடர்பாக மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் மாணவர்களுக்கு
சுத்தம், சுகாதாரம் பேணுதல், நேரம் தவறாமை, பெரியவர்களை மதித்தல், மரியாதை காட்டுதல்,  தேச பக்தி, சேமிக்கும் பழக்கம் ஆகிய நல்ல பண்புகளை கற்றுக் கொடுத்தல் சிறு சிறு செயல்முறைப் பயிற்சிகள் மூலம் கல்வி கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் தரம் ஒன்றிற்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீட்டிற்கு நேரடியாக மாணவர்களை அழைத்துச் சென்று காண்பித்து விளக்கமளித்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக