ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

39வது அகில இலங்கை தேசிய விளையாட்டுபோட்டி-2013 (பட்டிப்பளை பிரதேசம்)


39வது அகில இலங்கை தேசிய விளையாட்டின் முதற்கட்டமான பிரதேச விளையாட்டு விழாவின் மன்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட கழகங்கள் பங்கு கொள்ளும் குழு விளையாட்டு க்களின் அடிப்படையில் ஆண்களுக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி
கடந்த 16.02.2013 சனிக்கிழமை மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலாம் சுற்றில் கடுக்காமுனை ஆதவன் அணியை வெற்றி கொண்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் இரண்டாம் சுற்றில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரை வெற்றிகொண்டு அரையிறுதி போட்டிக்கு தெரிவாகினர்.
           அரையிறுதியில் மகிழடித்தீவு மகிழை அணியினரை வீழ்த்தி அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் இறுதிப்போட்டிக்கு தெரிவாகினர். இறுதிப் போட்டியாக அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினருக்கும் அம்பிளாந்துறை கதிரவன் அணியினருக்கும் நடைபெற்றது. இப்போட்டியில் அம்பிளாந்துறை கதிரவன் அணியினரை வீழ்த்தி அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் வெற்றிபெற்று 2013ம் ஆண்டிற்கான பட்டிப்ளை பிரதேச சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டனர். 

       பெண்களுக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டியில் கடுக்காமுனை ஆதவன் அணியினருக்கும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினருக்கும் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பெண்கள் அணியினர் வெற்றிபெற்று 2013ம் ஆண்டிற்கான பட்டிப்பளை பிரதேச சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டு மைதானத்தில் எல்லே போட்டி இடம்பெற்றது. இதில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் முதல் சுற்றில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினரை எதிர்கொண்டு வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகினர்.  இறுதிப் போட்டியானது அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினருக்கும் அம்பிளாந்துறை கதிரவன் அணியினருக்கும் இடையில் நடைபெற்ற போட்டியானது விறுவிறுப்பான போட்டிக்கு மத்தியில் இறுதிவரை போராடி அம்பிளாந்துறை கதிரவன் அணியினர் வெற்றிபெற அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் இரண்டாம் இடத்தினை தட்டிக்கொண்டனர்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக