வியாழன், 28 பிப்ரவரி, 2013

கிராமங்களுக்கிடையிலான அபிவிருத்தி தொடர்பான ஒன்றுகூடல்

கிராமங்களுக்கிடையிலான அபிவிருத்தி தொடர்பான ஒன்றுகூடல் ஒன்று அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் 26.02.2013 செவ்வாய் அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச செயலாளரின் ஆலோசனையின் பேரில் கிராம
உத்தியோகஸ்தர் திருமதி சகிதா குகானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் ஒன்றுகூடலில் வீதி புனரமைப்பு, விளையாட்டு மைதானம் ஒழுங்கு படுத்தலும் அதற்கான அபிவிருத்தி பற்றியும், பொதுவான குடிநீர் கிணறுகள் கிராமத்தில் பொருத்தமான இடங்களில் அமைத்தல், ஆலய குளத்தினை புனரமைப்பு செய்தல், மலசலகூடம் இல்லாத குடும்பங்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தல், கிராமத்தின் வடிகான்களை நீர் வடிந்தோடுவதற்கு ஏதுவாக பொருத்தமாக அமைக்க உதவுதல், இளைஞர் கழகங்களையும், விளையாட்டு துறைகளையும் ஊக்குவித்தல் சம்பந்தமாக  ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டது. அத்தோடு இவ்வாறான பொது வேலைகளை கிராம உத்தியோகஸ்தர், சமூர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு  அழைப்பு வழங்கி செய்தல் வேண்டுமெனவும் பேசப்பட்டது. இவ் ஒன்றுகூடலில் விக்னேஸ்வரா ஆலய பரிபாலன சபை, கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், இந்து சமய வளர்ச்சி மன்றம், சனசமூக நிலையம், பாலர் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் அமைப்பு என கிராமத்தில் உள்ள ஒன்பது அமைப்புக்கள் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக