செவ்வாய், 26 மார்ச், 2013

பட்டிப்பளை பிரதேச பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விவாதப் போட்டியின் இறுதி முடிவுகள்


பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் எதிர்வரும் 29, 30, 31 ஆகிய தினங்களில் நடாத்தவுள்ள “மண்கமழும் மங்கல விழா” வினை முன்னிட்டு பட்டிப்பளை கோட்ட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கான விவாதப்போட்டியை 26.03.2013 திகதி அதாவது இன்று  மட்/அரசடித்தீவு
விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தினுள் முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகியது. பிரதேச மண் கலந்த கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்பட்ட இவ் விவாதப்போட்டி எமது பிரதேசத்தைச் சேர்ந்த பல பாடசாலைகள் பங்குபற்றி இருந்தன.

       இதில் முதல் கட்ட போட்டி நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு  இடம்பெற்றது. இதில் இறுதிப்போட்டிக்காக மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அணியினரும் மட்/ முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய அணியினரும் பங்குபற்றினர். இத்தோடு மூன்றாம் இடத்தை தெரிவுசெய்யும் பொருட்டு மட்/முதலைக்குடா மகா வித்தியாலய அணியினரும் மட்/மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினரும் பங்குபற்றினர். இதன்போது முதலாம் இடத்தை மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அணியினரும் இரண்டாம் இடத்தை மட்/ முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய அணியினரும் பெற்றுக்கொண்டதோடு மூன்றாம் இடத்தை மட்/முதலைக்குடா மகா வித்தியாலய அணியினரும் பெற்றுக்கொண்டனர். இவ்வாறு முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப்பெற்ற அணியினருக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் சான்றிதழ்களும் எதிர்வரும் 31ம் திகதி இறுதிநிகழ்வில் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். இவ் விவாத அரங்கில் சிறப்பு பேச்சாளராக மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி கெக்கநிசா தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
           இவ் இறுதிச் சுற்றுப்போட்டிக்குரிய பிரதம நடுவராக மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிகல்வி பணிப்பாளர் திரு. ஸ்ரீநேசன் அவர்களும் உதவி நடுவர்களாக பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கவிஞர் மேரா, செயலாளர் செல்வி சுதர்ஷினி அவர்களும் பங்குபற்றி இருந்தனர். 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக