சனி, 9 மார்ச், 2013

அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்தில் சிறுவர்களுக்கான கணனி மையம் திறப்பு விழா

அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்தில் பட்டிப்பளை பிரதேச சிறுவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு நேற்றயதினம் 09.03.2013 சனியன்று STA அமைப்பினரால் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தலைமைதாங்கும் குடும்பத்தில் இருக்கின்ற பத்து வயதிற்கும் குறைவான சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டும்
அவர்களின் கற்றலுக்காகவும் பணம் வழங்கப்பட்டது. மகளிர் தினத்தையொட்டி மகளிருக்கான விசேட கலந்துரையாடல் இதனை  STA அமைப்பின் தலைவர்து திரு. S.கமலதாசன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் அமைந்திருந்தது. தொடர்ந்து திரு. S.கமலதாஸ் அவர்களின் உரையில் இப் பிரதேசத்தின் மகத்துவம் பற்றியும் இங்குள்ள மக்கள் பற்றியும் சிறப்பாகவும் தெளிவாகவும் கூறி மகளிருக்கான சமூகவிழிப்புணர்வு பற்றிய கருத்துக்கள் வழங்கினார்.  மேலும் இவ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டுவரும் சமூகத்தொண்டர் S .சேயோன் அவர்களின் கருத்துப்படி பெண்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்றும் அதற்கான உதவிகளை STA அமைப்பு செய்யும் அதற்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்கவேண்டும் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து அரசடித்தீவு கிராம சிறுவர்களின் கணனி அறிவினை வளர்க்கும் முகமாக சக்தி மகளிர் இல்லத்தில்    STA அமைப்பினரால் கணனி மையம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான கணனியை தனது பிறந்தநாள் பரிசாக செல்வன்.ச.ஜீவநீதன் அவர்களால் வழங்கப்பட்டது.
-தகவல் யோகி-





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக