செவ்வாய், 12 மார்ச், 2013

சிவ விரதங்களில் சிவராத்திரி


“தென்னாடுடைய சிவனே போற்றி  எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் பெருமொழியின் பொருள் வெள்ளிடைமலை. தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன் என்பது அத்திருவாசகத்தின் கருத்து. சிவன் என்பதன் பொருள் மங்ளம்
தருபவன் என்றும் செம்மை தருபவன் என்றும் கூறப்படும். சிவவிரதங்களாக சிவராத்திரி, பிரதோச விரதம், சோமவாரம், திருவாதிரை விரதம் போன்றன காணப்படுகின்றன. இதில் சிறப்பான விரதமாக சிவராத்திரி அமைகிறது. இவ்விரதம் மாசி மாதத்திலே வருகின்ற தேய்பிறை பதிநான்காம் நாளில் (கிருஷ்ண பட்சத்தில் சதுர்தியில்) வருகின்றது. ராத்திரி என்பது இருள் காலம் என்பதை யாவரும் அறிந்ததே. எனினும் உண்மையான இருள் காலம் என்பது இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி இருக்கும் காலமாகும். இதனை சர்வ சங்கார காலம் எனவும் பிரளய காலம் எனவும் ஊழிக்காலம் எனவும் பலவாகக் கூறுவர். இரவில் ஒளியின்றி உயிர்களின் நடமாட்டம் இல்லாது அமைதி நிலவுவது போல  பஞ்ச பூதங்களும் தனு, கரண, புவண போகங்களும் ஒன்றுமே இல்லாது உயிர்கள் செயளற்று கிடப்பதனால் அமைதி நிலவும். அந்த பேரிருளில் தனித்து நிற்பவரே சிவபெருமான் ஆவார். இதனாலேயே இதனை சிவராத்திரி என கொள்ளப்படுகிறது.

ஊழி முடிவில் ஒடுங்கிய உலகத்தை தோற்றுவிப்பதற்காக இறைவன் சோதி வடிவாக தோன்றிய நாளே லிங்கப்ப நாள் என்று கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பெருமான் விஷ்ணு போன்ற முதலியோரை தோற்றுவித்து படைத்தல், காத்தல் தொழிலை ஆரம்பித்தார் என்றும் கூறப்படுகிறது. சிவராத்திரி காலத்திலே நான்கு சாம பூசைகள் நடைபெற்றாலும் சிறப்பாக நடைபெறும் பூசை லிங்க பூசையாகும். இக்காலத்திலேயே விரதம் இருப்போர் இப்புசையில் சிறப்பாக பங்குகொள்வர்.   தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்ற கொள்கைக்கு இணங்க சிவபெருமானை முழுமனதோடு வளிபட்டால் சிவனின் பாதத்தினை அடையலாம் என்று கூறப்படுகிறது. சிவராத்திரி தொடர்பாக பல கதைகள் கூறப்படுகிறது. அதில் அடிமுடி தேடிய கதை, வேடன் கண்விழித்திருந்த கதை, தர்ம பரம்பரைக் கதை என பலகதைகள்  கூறப்பட்டாலும் இவ் விரதம் தொடர்பாக அப்பர் சுவாமிகள் தனது தேவாரத்தில் "செங்கண்ணனும் பிரமாவும் தன்னுள்ளே எங்கும்தேடி திருச்சிலுவும் காண்கிலார் இங்கிட்டு இருக்கிறேன் லிங்த்தார் தோன்றினார்" என்ற தேவாரத்தின் மூலம் அடிமுடி தேடிய கதை புலனாகிறது. 

எனவே சிவ விரதங்கள் பல இருந்தாலும் சிறப்பான விரதமாக சிவராத்திரி விரதம் கொள்ளப்படுகிறது. எனவே சைவ சமயத்தவர்கள் முத்திப்பேறு அடைய சிறந்த விரதமாகவும் இது அமைகிறது.   
சி.ருசகுமார்
அதிபர் விக்னேஸ்வரா
 அறநெறி பாடசாலை
அரசடித்தீவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக