செவ்வாய், 12 மார்ச், 2013

அரசடித்தீவில் சிவராத்திரி விரதம்


"சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே; மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்."
இது ஔவையின் திருமொழி, எளிய தமிழில் யாவரும் பொருள் கொள்ளும் வண்ணம் அமைந்த இப்பாடலில், விதியை மதி வெல்ல, இடைவிடாது
சிவாயநம சிந்தித்திருப்போர்க்கு பிறவி துன்பம் எதும் இல்லை, பிறவி துன்பத்திலிருந்து நீங்க இதுவே வழி, இல்லையெனில் விதி வழி சென்று துன்பத்தை அநுபவிக்க நேரிடும்.

             உலகம் பூராகவும் உள்ள இந்துக்களினால் கொண்டாடப்படும் சிவராத்திரி விரதமானது அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலயத்தில் பெருவிமர்சையாக இடம்பெற்றது. இதில் விக்னேஸ்வரா அறநெறிப்பாடசாலை மாணவர்கள், இந்து இளைஞர் வளர்ச்சி மன்றம் மற்றும் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இவ்விரதம்  அனுஸ்டிக்கப்பட்டது. இதில் விக்னேஸ்வரா அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் விசேட கூட்டு வழிபாடு இடம்பெற்றது. மேலும் இவ் ஆலயத்தில் நான்கு சாம புசைகள் நடைபெற்றது.  இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள்  சிவ விரத்த்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
தகவல்
-யோகி-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக