திங்கள், 15 ஏப்ரல், 2013

அம்பிளாந்துறையில் சித்திரை புத்தாண்டு வருட நிகழ்வாக மாபெரும் ஊஞ்சல் விழா-2013


அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது பிரதான வீதியில் அமைந்திருக்கும் 160 வருடம் பழமை வாய்ந்த நிழல் வாகை மரத்தடியில் 14.04.2013 அன்று 3.00 மணியளவில் இந் நிகழ்வு
நடைபெற்றது.

    எமது சமூகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ஊஞ்சல் விழாவினையும், ஊஞ்சல் பாடல்களையும் மீண்டும் எம் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டும் நோக்கில் இந் நிகழ்வு இடம்பெற்றது. மனிதனை சந்தோசப்படுத்துவதாகவும் பிரிந்துள்ள உறவுகளை இணைக்கும் ஓர் விழாவாகவும் இந் நிகழ்வு நடைபெற்றது. அம்பிளாந்துறை கிராமத்தில் ஊஞ்சல் ஆடும் நிகழ்வு காலாகாலமாக  இடம்பெற்று வந்துள்ளது. எமக்கு முன்புள்ளவர்களும், எமது முன்னோர்களும் ஊஞ்சல் ஆடியதை அறிந்திருக்கிறோம் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இவ்விழாவானது எமது பாரம்பரிய கலைகளில் இருந்து மருவிச் சென்றுள்ளது. இப்போது உள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஊஞ்சல் என்றால் என்ன என்பது தெரியாமல் இருக்கின்றது. ஆனால் தற்போது தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசார பண்பாட்டு விளையாட்டுக்களை  உள்ளடக்கிய ஊஞ்சல், கபடி, கிளித்தட்டு, பிள்ளையார்கட்டை, வார்ஓட்டம், கிட்டிபொல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் மருவிப்போகின்ற சூழலில் அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக் கழகம் களம் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது.  இந்நிகழ்வில் பா.அரியநேத்திரன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், திரு ரவிராஜ் அதிபர், திரு. க.புவனசிங்கராஜா அதிபர், திரு நமசிவாயம் ஆசிரியர், சி.நகுலேஸ்வரன் ஆசிரியர், முருகு தயாநிதி அதிபர், திரு விக்னேஸ்வரன் ஆசிரியர், ம.சூரியகுமார் ஆசிரியர், செல்வன் சசிகாந்தன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கிராமத்தின் பெரியார்கள், கழக உறுப்பினர்கள், சிறார்கள், கிராம மக்கள் என நூற்றுக்கணக்காவர்கள்  இந்நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக