சனி, 13 ஏப்ரல், 2013

அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் சித்திரை விளையாட்டு விழா-2013

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி 14.04.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.01 மணிக்கு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற உள்ளது.
நிகழ்வன...

*மங்கள விளக்கேற்றல்
*கழக கொடி ஏற்றுதல்
*இறைவணக்கம்
*வரவேற்புரை (பொருளாளர்)
*தலைமையுரை (தலைவர்)
*கல்வி பொது தராதர (சா/த) பரீட்சையில் 09 சிறப்பு சித்தி பெற்ற மாணவியை      
  கௌரவித்தல்
*பரிசளிப்பு நிகழ்வு
*நன்றியுரை (உப செயலாளர்)


விளையாட்டு நிகழ்வுகள்

1.மிட்டாய் ஓட்டம் (5 வயதிற்கு கீழ்)
2.பணிஸ் சாப்பிடுதல் (18 வயதிற்கு மேல்)
3.பலூன் ஊதி உடைத்தல் (7 வயதிற்கு கீழ்)
4.சாக்கோட்டம் (15 வயதிற்கு மேல்)
5.கண் கட்டி முட்டி உடைத்தல் (ஆண்)
6.தலையணைச் சமர் (ஆண்)
7.கிடுகு பின்னுதல் (பெண்)
8.ஊசிக்கு நூல் கோர்த்தல் (பெண்)
9.புலிக்கு வால் வைத்தல் (பெண்)
10.கயிறு இழுத்தல் (ஆண்/பெண்)
11.முட்டை மாற்றுதல் (ஆண்/பெண்)
12. மெதுவான சைக்கிள் ஓட்டம் (ஆண்)
13.மெதுவான மோட்டார் சைக்கிள் ஓட்டம் (ஆண்)
14.சுறுட்டு புகைத்தல் (40 வயதிற்கு மேல்)
15.பின்னோக்கி ஓடுதல் (40 வயதிற்கு மேல்)
16.தயிர் சாப்பிடுதல் (ஆண்)
17.வலைப்பந்து (பெண்)
18.குழுக்களுக்கிடையிலான அஞ்சல் ஓட்டம் (400m)
19.மாவூதி காசெடுத்தல் (15 வயதிற்கு கீழ் ஆண்)
20.40 மேற்பட்டவர்களுக்கான மாவூதி காசெடுத்தல்
21.மர்ம மனிதனை கண்டுபிடித்தல்
22.வினோத உடை

விக்னேஸ்வரா, 
விளையாட்டுக் கழகம்,
அரசடித்தீவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக