ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளன புனரமைப்புக் கூட்டம் - 2013


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் கீழ் இயங்கும் பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2013ம் ஆண்டுக்கான புனரமைப்புக் கூட்டம் 06.04.2013 சனிக்கிழமை மு.ப 11.00 மணியளவில்
பட்டிப்பளை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் செல்வன். ம. சூரியகுமார் தலைமையில் இடம்பெற்றது.
      இதன் முதல் நிகழ்வாக மௌனஇறை வணக்கத்துடன் ஆரம்பமாகி தலைவரின் தலைமையுரை இடம்பெற்றது. அவர் தனதுரையில் கடந்த வருடத்தில் இடம்பெற்ற கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் போதியளவு ஒத்துழைப்புக்களை இளைஞர் கழகங்கள் வழங்கவில்லை இவ்வருடம் அவ்வாறான தவறுகளை விடாது இளைஞர் கழகங்கள் புத்துணர்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும் என கூறினார். தொடர்ந்து உரையாற்றிய பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளன செயலாளர் திரு. அ. தயாசீலன் (பட்டிப்பளை இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்) பட்டிப்பளை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் போட்டிகளில் கொடுக்கப்படும் முன்னுரிமைகளைப் போன்று மாவட்ட மட்டம், தேசிய மட்டங்களில் பங்குபற்றி எமது பிரதேசத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும், இதற்கு இளைஞர் கழகங்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
  தொடர்ந்து பட்டிப்பளை பிரதேச செயலாளர் கௌரவ திருமதி வில்வரெத்தினம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் சிறந்து விளங்கிய எமது பிரதேசம் தற்போது நகர் புறங்களைவிட எமது பிரதேசத்து இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் எமது பாரம்பரிய தனித்துவம் மறைந்து கொண்டு செல்வது வேதனைக்குரியது. எனவே இளைஞர் கழகங்கள் இவ்வாறான  கலை,கலாசார,விழுமிய பண்பாட்டு அம்சங்களை எமது மண்வாசனையோடு கட்டிக்காக்க முன்வர வேண்டுமெனவும் இவ்வாறான செயற்பாடுகளை செயற்படுத்துவதன் மூலம் எமது பிரதேசத்திற்கு மேலும் பல உதவிகளை பெறமுடியும் எனக்கூறினார். 
இதனைத்தொடர்ந்து பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிருவாக தெரிவு இடம்பெற்றது. மேற்படி தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம் 



தலைவர்                                   :-     ம. சந்திரகுமார்
செயலாளர்                              :- அ.. தயாசீலன் (இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்)
உபசெயலாளர்                       :- ச. கோவிதா
பொருளாளர்                          :- இ. திலீபன்
அமைப்பாளர்                        :- வெ. பிரபா
உபதலைவர்                          :- த. டிவிதன்
அமைப்பாளர்                       :-  எ. சரணியா
விளையாட்டுத்துறை     :- அ. கிறோஜன்
கலாசாரம்                              :- வெ. சௌந்தராசா
தொழில் பயிற்சி                 :- த. காந்தன்
ஊடகம்/தகவல்                   :- ந. நிஷாங்கன்
தேசிய சேவை                     :- மே. சசிகலா
கல்விமுயற்சி/வழிநடத்தல்   :- இ. லெபந்தன்
கணக்கு பரிசோதகர்         :- கு. பிரிந்தன்
சூழல் பாதுகாப்பு                 :- s.டினேஸ்கரன்
கணக்காளர்/நிதிஆள்கை   :- எ.சுகந்தினி
ஒழுக்காற்றுக்குழு             :- க.விபுள்கரன்
                                                         சி.பிரணவநாத்
                                                         பு. சதீஸ்குமார்
                                                        யோ.கேதீஸ்வரன்
                                                         ச.அமலதாஸ்

ஆலோசனைக்குழு :- அ. தயாசீலன் (இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்)
                                                இ. சாந்தலிங்கம்    (தான்தோன்றீஸ்வரர் ஆலய செயலாளர்)
                                                ச. அகிலேஸ்வரன் (அதிபர்)
                                                ம. சூரியகுமார் (முன்னால் இளைஞர் கழக சம்மேள தலைவர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக