வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மாணவர்களின் கணிதப் பாடத்தின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு விசேட பரீட்சை


பட்டிப்பளை பிரதேசத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் இவ்வருடம் தோற்றவிருக்கும் மாணவர்களின் கணிதப் பாடத்தின் அடைவு மட்டத்தை  அதிகரிக்கும் பொருட்டு வேள்ட்விசன் (WORLD VISION) நிறுவனத்தின் இணை நிறுவனமான
உக்டா (UT.C.DA) நிறுவனத்தின் செயற்திட்டமாக பரீட்சை ஒன்று 06.04.2013 அதாவது இன்று நடைபெற்றது.
             மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இப்பரீட்சையில்  மட்/அம்பிளாந்துறை கலைமகள் மகா  வித்தியாலயம், மட்/கடுக்காமுனை வாணி வித்தியாலயம், மட்/அரசடித்தீவு வி.ம.வித்தியாலயம், மட்/கொக்கட்டிச்சோலை ரா.கி.மி.வித்தியாலயம், மட்/மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம், மட்/முதலைக்குடா மகா  வித்தியாலயம், மட்/முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம், மட்/மாவடிமுன்மாரி அ.த.க.பாடசாலை, மட்/கொல்லநுலை நாமகள் வித்தியாலயம், மட்/நாற்பதுவட்டை அ.த.க. பாடசாலை ஆகிய ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக