வியாழன், 16 மே, 2013

விக்னேஸ்வரா கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மேற்பார்வையாளர்களுக்கான ஒன்றுகூடல்

அரசடித்தீவு விக்னேஸ்வரா கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடைபெற்றுவரும் இரவு நேர கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் மேற்பார்வையாளர்களுக்கான ஒன்றுகூடலானது 16.05.2013 அன்று மாலை 6.00 மணியளவில் ஒன்றியத்தின் புதிய தலைவரான திரு.S.வரதராஜன்
(ஆசிரியர்) அவர்களின் தலமையில் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இவ் ஒன்றுகூடலில் அரசடித்தீவு  கிராமத்தில் உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்களாகவுள்ள இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது. இவ் ஒன்றுகூடலில் 5ம் ஆண்டு புலமை பரீட்சையிலும், கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீடசையில் இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களின் கற்பித்தலுக்கு மேலும் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது பற்றியும், இரவு நேர வகுப்புக்களில் சமூகம் தராத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி மாணவர்களை இணைத்துக்கொள்வது பற்றியும் மேலும் பல விடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.  மேலும் மேற்பார்வையாளர்களின் நேரம், ஒழுக்கம் போன்ற விடயங்களில் ஒழுக்காற்றுக்குழு மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் முடிவெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக