வியாழன், 4 ஜூலை, 2013

மட்/மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சமூகத்தினரால் டெங்கு ஒழிப்பு பேரணி

(மாயன்) மட்/மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சமூகத்தினரால் டெங்கு ஒழிப்பு பேரணி ஒன்று அதிபர் திரு.வே.மகேசரெத்தினம் அவர்களின் தலைமையில் பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றன. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து நேற்று 2013.07.03 ஆம் திகதி புதன்கிழமை
டெங்கு ஒழிப்பு சம்பந்தமான பேரணியுடனான விழிப்புணர்வு செயற்திட்டம் மாவடிமுன்மாரி, பனிச்சையடிமுன்மாரி, 39ஆம் கிராமம், வாழைக்காலை போன்ற கிராமங்களில் செயற்படுத்தப்பட்டன.
மாபெரும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் - 2013 நிகழ்ச்சித்திட்டமானது, இம்முறை டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிமனையின் வேண்டுகோளின் பேரில் பட்டிப்பளை கோட்ட பாடசாலைகளில் 2013.07.01 திங்கட்கிழமை தொடக்கம் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே விழிப்புணர்வு செயற்பாடு மேற்கொள்ளப்பட்;டது. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், “டெங்குவை ஒழிப்போம், மாணவர்களை காப்போம்” , “டெங்கு ஒரு ஆட்கொல்லி, அதை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்போம்” , “ஒழிப்போம் ஒழிப்போம் டெங்குவை ஒழிப்போம்” , “ மக்களை காக்க டெங்குவை ஒழிப்போம்” என்ற சுலோகங்களையுடைய பதாதைகளை ஏந்தியவாறு வீதிகளில் உரத்த சத்தங்களுடன் மாணவர்களும் ஆசிரியர்களும் சென்றனர். பின்னர் வீடுகளிற்கும் பொது இடங்களுக்கும் சென்று மக்களுக்கு டெங்கு நுளம்பு பற்றியும் அதனால் ஏற்படும் பேரழிவுகள் பற்றியும் தெளிவு படுத்தினர். இத்தோடு அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகரின் உதவியுடன் டெங்கு நுள்பு பெருகக் கூடிய இடங்களை இனங்கண்டு அவற்றை சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டதோடு கிணற்று நிரைச் சுத்திகரிக்கும் வண்ணம் குளோரின் போடப்பட்டன. இந்நிகழ்வில் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகரும் கலந்து கொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும். காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் மதியம் 12.30 மணியளவில் நிறைவடைந்தது. 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக