ஞாயிறு, 15 ஜூலை, 2012

முதலைக்குடா விநாயகர் விளையாட்டுகழகத்தின் 51 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி


முதலைக்குடா விநாயகர் விளையாட்டுகழகத்தின் 51 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு   14 - 15 /07 / 2012ஆகிய தினங்களில்  நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 25 அணிகள் கலந்து
சிறப்பித்தன.
இதில் முதலாம் சுற்றில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியினை வீழ்த்தி அரசடித்தீவு  விக்னேஸ்வரா அணியினர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

 இரண்டாம் சுற்றில் பன்சேனை உதயயொளி அணியினை வீழ்த்தி அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

 அரை இறுதிச்சுற்றுப்போட்டியில் விளாவெட்டுவான் ராஜா அணியினை வீழ்த்தி அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதிச் சுற்றுப்போட்டியில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் முதலைக்குடா விநாயகர் அணியினை சொந்த மண்ணில் வீழ்த்தி விநாயகர் விளையாட்டுகழகத்தின் 51 ஆவது நினைவுக் கிண்ணத்தை விக்னேஸ்வரா தனதாக்கிக்கொண்டது .

சிறந்த ஆட்டநாயகனாக விக்னேஸ்வரா அணியின் கஜன்  தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த கோல் காப்பாளராக விநாயகர் அணியின் குவேஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இவ் ஆண்டில் முதலைக்குடா  விநாயகர் அணியினரை   அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியினர் மூன்று முறை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக