ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மட்டக்களப்பு – அரசடித்தீவு ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலய அலங்கார உற்சவம் - 2012

சீர் கொண்ட கரிமுகமுகைந்து கையும்
சிறந்த ஆபரணமுடன் ஒற்றைக் கொம்பும்
ஏர் கொண்ட விமலர் கடங்களியை தீர்த்து
எழில் குகற்று முன் பிற்நத அமரர் மெச்ச
பேர் கொண்ட பிரணவமாய் பிரணவத்துள்
பெருமை சிவலிங்கமென வந்த மூலம்
கார் கொண்ட அண்ட பிண்ட பொங்கும் தானாய்
காத்தீடும் கணபதியை வணங்குவோம்.


மட்டக்களப்பு – அரசடித்தீவு 
ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலய அலங்கார உற்சவம் - 2012
ஆரம்பம் – 2012.09.17   முடிவு – 2012.09.20


மெய்யடியார்களே!
மீனினம் இசைபாடும் மட்டுநகர் வாவிக்கு தென்மேற்கே தென்றல் தாலாட்ட தெம்மாங்கு பாட்டொலிக்க நெற்கதிர்கள் தலையசைக்க பாலோடு தேனும் பலவகைத் திரவியங்களோடு சிறப்புற்று விளங்கும் சீர்பதியாம் அரசடித்தீவின் கண்ணாக கோயில் கொண்டு அடியார்களுக்கு இடுக்கண் களைந்து இன்னல்கள் நீக்கி இஷ்ட சித்திகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஶ்ரீ விக்னேஸ்வரப் பெருமானுக்கு அலங்கார உற்சவம் நிகழும் நந்தன வருடம் புரட்டாதித்திங்கள் 1ம் நாள் 2012.09.17ந் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, புரட்டாதித்திங்கள் 4ம் நாள் 2012.09.20ந் திகதி வியாழக்கிழமை, காலை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறும்.

கிரியாகால விபரம்

2012.09.17 திங்கட்கிழமை 1ம் நாள் திருவிழா 
மாலை 6.00 மணிக்கு ஸ்நபனாபிஷேகத்துடன் ஆரம்பமாகும். தொடர்ந்து இரவுத் திருவழாவும் இடம்பெறும்.

2012.09.18 செய்வாய்கிழமை 2ம் நாள் திருவிழா 
மாலை 6.00 மணிக்கு ஸ்நபனாபிஷேகத்துடன் ஆரம்பமாகும். தொடர்ந்து இரவுத் திருவழாவும் இடம்பெறும்.

2012.09.19 புதன்கிழமை 3ம் நாள் திருவிழா
மாலை 6.00 மணிக்கு ஸ்நபனாபிஷேகத்துடன் ஆரம்பமாகும். தொடர்ந்து இரவுத் திருவிழாவும் இடம்பெறும். அன்றைய நாள் விநாயகர் சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்படும்.

அன்றிரவினைச் சிறப்பிக்கும் முகமாக விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும், இந்து சமய வளர்ச்சி மன்றமும் இணைந்து வழங்கும் கலைஇசை இடம்பெறும்.

2012.09.20 வியாழக்கிழமை
காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறும்.
அன்று மாலை 6.00 மணிக்கு வைரவர் பூசையும் நடைபெறும்.

திருவிழாக்காலங்களில் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்படும்.

அனைவரும் வருக! இறையருள் பெறுக!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக