சனி, 26 ஜனவரி, 2013

அரசடித்தீவு விக்னேஸ்வரா படிப்பகத்தின் 5ம் ஆண்டு நிறைவு விழா

அரசடித்தீவு விக்னேஸ்வரா படிப்பகத்தின் ஐந்தாண்டு நிறைவு விழாவானது 26.01.2013 சனியன்று படிப்பக வளாகத்தில் முகாமையாளர் திரு.அ.கருணாகரன் (ஆசிரியர் மட்/மாவடிமுன்மாரி அ.த.க பாடசாலை) அவர்களின்தலைமையில் நடைபெற்றது. இதில் முதலாவது நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. முதலாவது
சுடரினை முகாமையாளர் திரு.அ.கருணாகரன் ஏற்றிவைக்க பின்னர் செல்வி . S.கிருசாலினி  செல்வி.S. நிலக்‌ஷனா  
அவர்களினால் இசைக்கப்பட்டது. ஒன்றன் பின்ஒன்றாக கவிதை, பேச்சு, பாடல், வாழ்த்துரை என கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. இதில் கருத்துரையாற்றிய முகாமையாளர்  காலப்போக்கில் இப்படிப்பகமானது இன்னும் பல மாணவர்களை பல்கலைக்கழக அனுமதியை பெறவைப்பதாக கூறி தனது உரையை முடித்தார். தொடர்ந்து உரையாற்றிய  படிப்பக ஆசிரியரான திரு.க. புவனசிங்கராஜா (அதிபர் மட்/மண்டபத்தடி அ.த.க பாடசாலை ) அவர்கள் மாணவர்கள் வேகம்இவிவேகத்துடன் செயற்படுகிறார்கள் என்றும் படிப்பகமானது நல்ல ஒழுக்கமுள்ள மாணவர்களை வளர்க்கின்றது என்றுகூறி தனது கருத்தை நிறைவுசெய்தார். தொடர்ந்து உரையாற்றிய திரு.க. கிருபானந்தசிவம் (பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், UNDA நிறுவனத்தின் முகாமையாளர்) அவர்களின் கருத்துப்படி பிற படிப்பகங்கள் வியாபார நோக்கோடு செயற்பட விக்னேஸ்வரா படிப்பகமானது சேவை நோக்குடன் செயற்பட்டு வருகின்றது என்றுகூறி உரையை முடித்தார். தொடர்ந்து   படிப்பக ஆசிரியரான திரு.க.மகாலிங்கம்  (ஆசிரியர் மட்/களுமுந்தன்வெளி அ.த.க பாடசாலை) அவர்களின் உரையில் மாணவர்கள் தேடல் மூலம் தங்களின் கல்வியை வளர்த்துக்கொள்கிறார்கள் என்றும் இப் படிப்பகம் அதற்கு துணைபுரியும் என்றுகூறி உரையை முடித்தார். இதில் விக்னேஸ்வரா படிப்பக ஆசிரியர்களான சி.பாத்தீபன் (தேசிய கல்வியற்கல்லூரி மட்டக்களப்பு ) த.ஜெமஸ்கரன் போன்றோர் கருத்துரை வழங்கினர்.  இதில் விக்னேஸ்வரா படிப்பக ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
-தகவல் யோகி-




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக