வியாழன், 31 ஜனவரி, 2013

அரசடித்தீவு விக்னேஸ்வரா கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டம்

அரசடித்தீவு விக்னேஸ்வரா கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது 2013.01.29 திகதி பி.ப.5.00 மணியளவில் ஒன்றியத்தின் உபதலைவர் திரு. ச.காமராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் முதல் நிகழ்வாக மௌனஇறைவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து தலைவர் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அவரின் உரையில் ஆரம்பத்தில்
எமது கிராமத்திலேயே இரவுநேர கற்றல்-கற்பித்தல் செயற்பாடு மிகவும் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக நடந்து வந்தது. தவிர்க்கமுடியாத சில காரணங்களினால் 2012ம் ஆண்டு மந்தமான நிலையிலேயே இரவுநேர கற்றல்-கற்பித்தல் காணப்பட்டது. எனவே எதிர்வரும் காலங்களில் எமது அமைப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டதோடு அதற்காக சிறந்த நிருவாக மறுசீரமைப்பு அவசியமென கூறி தனது கருத்துரையை நிறையுசெய்தார். தொடர்ந்து செயலாளர் திரு.பே.ஜெயக்கமல் அவர்களினால் கடந்த கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நிருவாகத்தெரிவு இடம்பெற்றது. செயலாளராக ஏற்கனவே இருந்த திரு.பே.ஜெயக்கமல் அவர்களும் தலைவராக திரு. தே.பவளசிங்கம் அவர்கள் புதிதாக தெரிவுசெய்யப்பட்டார். பொருலாளராக திரு. தா. ஜெயராம் அவர்களும் உபதலைவராக திரு.ச.காமராஜ் அவர்களும் உபசெயலாளராக திரு.அ.நேமிகரன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். தொடர்ந்து ஒழுக்காற்றுக் குழு உறுப்பினர்களாக திரு.ச.வாலசேகரம் திரு.க.அருணகிரி, திரு.க.பகிரதன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். அடுத்து ஆலேசகர்களாக திரு.க.கிருபானந்தசிவம், திரு.S.சற்குணம், திரு.இ.மேகராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து பிற விடயம் சார்பாக கலந்துரையாடப்பட்டது. அதில் தரம்-5 , தரம்-9, தரம்-10, தரம்-11 ஆகிய வகுப்புகளுக்கு இரவுநேர கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதனை 2013.02.06ம் திகதி புதன்கிழமை வைபவரீதியாக மாலை 06.00 மணிக்கு மட்/அரசடித்தீவு மகா வித்தியாலயத்தில் நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்வகுப்புக்கள் வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 06.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை நடாத்த தீர்மானிக்கப்பட்டு இதற்கு மேற்பார்வை பொறுப்பாளர்களாக திங்கட்கிழமை திரு.S.சந்திரகுமார் அவர்களும் செவ்வாய்கிழமை திரு.சி.வாலசேகரம் அவர்களும் புதன்கிழமை திரு.S. சௌந்தராஜா அவர்களும் வியாழக்கிழமை திரு.த.பவனிதன் அவர்களும் சனிக்கிழமை திரு.க.பகிரதன் அவர்களும் ஞாயிற்றுக்கிழமை திரு.சி.ருசகுமார் அவர்களும் தாங்களாகவே முன்வந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.  தொடர்ந்து புதிய தலைவர் அவர்களினால் அமைப்புக்கு ஒரு கணனியை பெற்றுத்தருமாறு திரு.க.கிருபானந்தசிவம் அவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டது. வேண்டுகோளுக்கினங்கி அமைப்பிற்கென கட்டடம் ஒன்று இருந்தால்  அதனை மிக விரைவாக பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். அத்தோடு கிராமத்தில் உள்ள மக்களிடமும் புலம் பெயர் மக்களிடமும் மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் எமது உறவுகளிடமும் தங்கள் அமைப்புக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டு தனதுரையை நிறைவுசெய்தார். இறுதியாக செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டமானது இரவு 7.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக