புதன், 6 பிப்ரவரி, 2013

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் - 2013


அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது 04.02.2013 திங்களன்று பி.ப 3.00 மணியளவில்  இரண்டு நிமிட மௌன இறைவணக்கத்துடன்   மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் கழகத் தலைவர் திரு.ச.வேந்தராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. தொடர்ந்து கழகத் தலைவரின் தலைமையுரை இடம்பெற்றது. இவர்
தனது உரையில் கழகத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும், 2012ல் 17 போட்டிகளில் கலந்துகொண்டு 13 போட்டிகளில் முதலிடத்தையும், ஒரு போட்டியில் இரண்டாம் இடத்தையும், இன்னுமொரு போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தது எமது கழகம் என்று கூறி, இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கழக உறுப்பினர்கள் , நலன்விரும்பிகள், மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறியதோடு தொடர்ந்தும் எமது கழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் உதவி புரியவேண்டும் எனவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
   
            தொடர்ந்து கழக செயலாளர் திரு.தே.பவளசிங்கம் அவர்களால் கடந்த கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012ம் ஆண்டிற்கான கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கணக்கறிக்கையானது சில காரசாரமான கேள்வி பதிலுக்கு மத்தியில் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

            அதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டிற்கான புதிய நிருவாக சபைத் தெரிவு இடம்பெற்றது. இதில் செயலாளர் , தலைவர், பொருளாளர் ஆகியோர் முறையே திரு.தே.பவளசிங்கம், திரு.ச.வேந்தராசா, திரு.கு.கந்தசாமி ஆகியோர் மீண்டும் அதே பதவிகளுக்கு சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர்.

             தொடர்ந்து உபதலைவராக இ.துலாஞ்சலிநாதன், பதில் உபதலைவராக க.பகிரதன்  , உப செயலாளராக கி.லெபந்தன் ஆகியோர் சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து கழக உறுப்பினர்கள் தெரிவில் ஏற்கனவே இருந்த த.பவநிதன், சு.திலகராஜ், இ.சிவராஜ், செ.சதீஸ்குமார், ம.மயூரன், சு.இராகுலன், இ.ராகுலன், ஆகியோர் சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர்.அதனைத்  தொடர்ந்து கணக்கு பரிசோதகர்களாக பொ.லதாகரன், ச.காமராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் கழக ஆலோசகர்களாக சி.வாலசேகரம், சு.இன்பராசா, க.கிருபானந்தசிவம் ஆகியோர் சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர்.

          தொடர்ந்து பிற விடயம் சார்பாக க.கிருபானந்தசிவம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கழகத்திற்கு ஒரு கட்டிடம் அவசியம் எனவும், அதற்காக சனசமூக நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தை திருத்தி எடுக்கும் படியும், அதற்கு தான் தேவையான உதவி தருவதாகவும் கூறி தனது  உரையை நிறைவு செய்தார்.
                   
                தொடர்ந்து சு.இன்பராசா கருத்து தெரிவிக்கையில் கழகமானது இந்த ஆண்டில் இருந்து ஒரு இறுக்கமான கட்டுக்கோப்புடன் செயற்பட வேண்டும் எனக் கூறியதோடு, கழக அங்கத்தவர்களிடம் சிறந்த தொடர்பாடலும், புரிந்துணர்வும் காணப்படவேண்டுமெனவும், ஓய்வு பெற்ற வீரர்களை கெளரவிக்கும் போது ஒரு திட்டமிட்ட நடைமுறையை கையாள வேண்டுமெனவும் கூறி   தனது  உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து கி.மோகன் கருத்து தெரிவிக்கையில் கழக உறுப்பினர் சிலருக்கு தான் முன்னின்று முதலுதவி பயிற்சி வழங்குவதாகவும் அதற்கு அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும் எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
              
                அத்தோடு எமது கழகத்தின் வளர்ச்சிக்கும்,அதன் செயற்பாட்டிற்கும் உதவிபெறுவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. அதில் எமது கிராமத்தில் உள்ள மக்களிடம் இயன்றளவு பணம் மற்றும் ஏனைய உதவிகள் பெறுவது எனவும், கூடிய வருமானம் பெறும் தனி நபர்களிடம் உதவி கோரப்படவேண்டுமெனவும், மிக முக்கியமாக வெளிநாடுகளில் தொழில்புரியும் ஆதரவாளர்களிடம் அதிக உதவியை எதிர்பார்க்க வேண்டியுள்ளதாகவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்வதாகவும் கூ றி தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. 
                 
              இறுதியாக கழகத்தின் செயலாளர் தே.பவளசிங்கம் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு கூட்டமானது மாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக