சனி, 16 மார்ச், 2013

மண்கமழும் மங்கல விழா - 2013

தமிழர்களின் பாரம்பரிய கலை இலக்கிய அம்சங்கள் நவநாகரீக மோகத்தாலும் சுயஅடையாளங்களைச் சிதைக்கும் செயற்பாடுகளாலும் மாறிக்கொண்டும் மாற்றப்பட்டும்வரும் இக்கட்டான இக்கால சூழலில் மண் பாசம் – மொழிப்பற்றுடன் வரலாற்றைத் தக்கவைத்தல் என்னும் அடிப்படையில் மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச கலை
இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடாத்தப்படும் மண்கமழும் மங்கல விழாவானது 2011 ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டு வருகின்றது. .  இவ்வருடம் மார்ச் மாதம் 29,30 ஆந் திகதிகளில் பாரம்பரிய பொருட்களைக் காட்சிப்படுத்துகின்ற கண்காட்சி நிகழ்வாகவும், மார்ச் 31 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு கொக்கட்டிச்சோலை சந்தியில் இருந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபம் வரை மேளவாத்தியம், கரகம், கும்மி, காலாட்டம், வசந்தன் என்பனவற்றை காட்சிப்படுத்தி ஊர்வலம் இடம்பெற்று காலை 9.00 மணிக்கு கலை நிகழ்வுகளும் மேடை நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளன. மேடை நிகழ்வில் கலைஞர் கௌரவிப்பு, விருது வழங்கல், பிரதேச படைப்பாளர்களின் ஆக்கங்கள் அடங்கிய பிரதேச முகவரியாக வெளியிடப்படும் முகவரி சஞ்சிகை வெளியீடு, கூத்து, விவாதம் முதலான போட்டிகளில் பங்கெடுத்தோருக்கான பரிசில்கள் வழங்கல், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளன. அத்துடன் விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் வடமோடி கூத்துப் போட்டி எதிர்வரும் மார்ச் 29 ஆந் திகதி மாலை 4.00 மணி முதல் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளன. கடந்த வருடங்களில் நடைபெற்ற மண்கமழும் மங்கல விழா தொடர்பான வைப்பகப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.





மட்டக்களப்பு பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம்

      இவ்விழாவினை சிறப்பாகச் செய்வதற்கு எமக்கு  எவ்வித அரச - அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் அற்றநிலையில் நம்பிக்கை என்னும் ஒன்றை மாத்திரம் கருத்தில் கொண்டு நடாத்தத்தீர்மானித்த மண்கமழும் மங்கல விழா சிறப்பாக நடைபெறுவதற்கு மண்ணை-மொழியை-கலைப்பாரம்பரியத்தைப் புரிந்துகொண்ட அவற்றின் மீது தீராத பற்றும்பாசமும் வைத்துள்ள எங்கள் நம்பிக்கைக்குரிய உறவுகளாகிய உங்களின் இயலுமான உதவியினை நேர்மையுடன் வேண்டிநிற்கின்றோம். உங்கள் உதவிகளை நீங்கள்அனுப்ப விரும்பினால் மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக தொடர்புகொள்ளவும்.
giramiam@yahoo.com ,
giramiam@gmail.com 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக