வியாழன், 18 ஏப்ரல், 2013

மன்முனை தென்மேற்குபிரதேசத்தில் மாபெரும் விளையாட்டு விழா இன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.


கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுசரணையுடன் ம.தெ.மே பிரதேச செயலக பிரிவு விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா இறுதி நாள் நிகழ்வுகள் அம்பிளாந்துறை கலைமகள் விளையாட்டு மைதானத்தில் 18.04.2013 ஆம் திகதி வியாழக்கிழமை
பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

     இந் நிகழ்வின் போது, பிரதேச செயலாளர் தனது தலைமையுரையில் விளையாட்டு மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் ஒன்று கடந்த வருடம் இவ்வாறானதொரு விளையாட்டு நிகழ்வினை எமது பிரதேசத்தில் செய்வதற்து பல முயற்ச்சிகள் எடுத்தும் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக செய்யமுடியவில்லை. இவ் வருடம் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுடன் எமது பண்பாட்டின் அடையாளமான பாரம்பரிய விளையாட்டுக்களையும் நடாத்துவதற்கு திட்டமிட்டு நடாத்தியுள்ளோம் என்றும், இப்பிரதேச மக்களே கலை, விளையாட்டு போன்ற நிகழ்வுகளில் முன்னோடிகளாக இருந்து வந்துள்ளனர். அவற்றை மேலும் வளர்ப்பதில அனுசரணை வழங்கிய வேள்ட்விசன் லங்கா, பட்டிப்பளை பிராந்தியத்தினருக்கும், பிராந்திய அபிவிருத்தி வங்கி(RDB)யினருக்கும் நன்றி கூறினார்.  தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய வீர வீராங்கணைகளுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்பட்டதோடு  பிரதேசத்தில் விளையாட்டுத்துறையில் சேவையாற்றியவர்கள் வரிசையில் திரு.ஜீவரெத்தினம், திரு. கந்தப்போடி, திரு.நமசிவாயம் போன்றோரும் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாகாணமட்டத்தில் வெற்றியீட்டிய உதைபந்தாட்ட வீராங்கணைகளும் கௌரவிக்கப்பட்டனர். 

         சிறப்பாக கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதேச சம்பியன்களாக திகழ்ந்த அம்பிளாந்துறை கதிரவன் (முதலாம் இடம்) விளையாட்டு கழகத்தினருக்கும் அரசடித்தீவு விக்னேஸ்வரா (இரண்டாம் இடம்) விளையாட்டு  கழகத்தினருக்கும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா (மூன்றாம் இடம்) விளையாட்டு கழகத்தினருக்கும் வெற்றிக்கிண்ணங்களும் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன.

          இந் நிகழ்வின்ஆரம்பத்தில் கழகங்களுக்கிடையிலான மென் பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டியில் பிரதேச ரீதியில் முதலாம் இடத்தைபெற்ற அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழக அணியினருக்கும் பட்டிப்பளை பிரதேச செயலக அணியினருக்கும் இடையில் நட்பு ரீதியான கண்காட்சி கிரிக்கெற் சுற்றுப்போட்டி இடம்பெற்றது. இதில் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி வெற்றியீட்டியது. இந் நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் கணக்காளர் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் போன்றோரும் பிரதேச துறைசார் பொறுப்பதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக