புதன், 17 ஏப்ரல், 2013

"துரோணர் வில்வித்தை" எனும் வடமொழி நாட்டுக்கூத்து அரசடித்தீவில்...

    எமது  பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான நாட்டுக்கூத்து மரபுக் கலை மறைந்து கொண்டு வருவதையிட்டு அதனை   பேணி பாதுகாக்கும் வகையில்  "துரோணர் வில்வித்தை" எனும்  வடமொழி நாட்டுக்கூத்து   அரசடித்தீவு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒருமித்து பழகிவருகின்றனர். அரசடித்தீவு ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு அருகாமையில் 16.04.2013 செவ்வாய் இரவு 8.00 இல் இருந்து ஆரம்பித்து  பழக்கப்பட்டு வருகின்றது. எமது கலைப் பாரம்பரியத்தை இதன் மூலமாக உலகிற்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டுசெல்ல வேண்டுமென்ற நோக்கில் இதில்  கைதேர்ந்த அண்ணாவிமார் கூத்துக் கலரிமார் இதில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக