திங்கள், 15 ஏப்ரல், 2013

படையாண்டவெளி மாருதி விளையாட்டுக் கழகம் நடாத்திய புத்தாண்டு விளையாட்டு விழா-2013

(த.ஜெமஸ்)மட்டக்களப்பு படையா ண்டவெளி மாருதி விளையாட்டுக் கழகம் சித்திரை   புத்தாண்டை முன்னிட்டு  நேற்றைய தினம் 15.04.2013 அன்று  முதன் நிகழ்வாக கலை 6.30 மணியளவில் மரதன் ஓட்ட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. படையாண்டவெளி நறூவுளியடி  ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் பல போட்டியாளகளும்
மற்றும் பொலிஸ்பாதுகாப்புடன் பார்வையாளர்னளின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டு மகிழடித்தீவு கிராமத்தினூடாக சென்று கொக்கட்டிச்சோலை , பட்டிப்பளை பிரதான வீதியூடாக வந்து அரசடித்தீவு பாடசாலை வீதியை ஊடறுத்து பண்டாரியாவெளி நாகதம்பிரான வீதியினூடாக சென்று காலை 7.40 மணிக்கு நறூவுளியடி  ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் முடிவடைந்தது. இதில் முதலாம் இடத்தினை க.ஜெயசங்கர் அவர்கள் வெற்றியை தனதாக்கிக்கொண்டார்.

இதனை தொடர்ந்து முதல் கட்ட நிகழ்வில் இரண்டாவது நிழ்வாக படையாண்டவெளி கிராமத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கழகங்களுக்கிடையான கரப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது. இதில் இளைஞர் கழகம், சிறுவர்கழகம், திருமணமான, திருமணமாகாத ஆண்களுக்கானது என ஆறு அணிகளாக இடம்பெற்றது. இதில் திருமணமாகாத அணி வெற்றி பெற்றது.
2ம் கட்ட நிகழ்வுகள் வரிசையில் தமிழர்களின் பாரம்பரிய கலாசார விளையாட்டுக்களும், சிறுவர்களுக்கான விளையாட்டுக்களும் என பல விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பெறுமதியான பரிசில்களை பெற்றுக்கொண்டனர். இதில் வழுக்குமரம் ஏறுதல், கோலம் போடுதல், மச்சானுக்கு மஞ்சள் பூசுதல், விலங்கோட்டம், நண்பிக்கு பொட்டு வைத்தல் போன்ற பல விளையாட்டுக்கள் நடைபெற்றன.
இந் நிகழ்வுகளில் பெண்கள் கூடுதலான விளையாட்டுக்களில் பங்கு பற்றி பரிசில்கள்  வாங்கியது குறிப்பிடதக்க அம்சமாகும்.
இதில் விசேடமாக 3ம் தவணை பரீட்சையில் முதலாம் நிலை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக