சனி, 20 ஏப்ரல், 2013

பட்டிப்பளைக் கிராம வாழ்வாதார குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வியாபாரச் சந்தையும் களியாட்ட நிகழ்வும்


கனிந்து முடிந்த நந்தன வருடத்தை தாண்டி விஜய வருடத்தில் தடம் பதித்திருக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு UMCOR நிறுவனத்தின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற பட்டிப்பளைக் கிராம வாழ்வாதார குழுவினால் கடந்த 18.04.2013- 19.04.2013 ஆகிய திகதிகளில் பட்டிப்பளை
வைரவர் விளையாட்டு மைதானத்தில் முதன்முறையாக மாபெரும் வியாபாரச் சந்தையும் களியாட்ட நிகழ்வும் பலவகையான விளையாட்டு நிகழ்ச்சிகளும் .நடைபெற்றது. பொதுமக்களை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிப்பதும், சுயதொழில் வாய்பினை ஏற்படுத்தும் முகமாகவும் இந் நிகழ்வு இடம்பெற்றது.  இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்காக UMCOR  நிறுவனத்தின் முகாமையாளர் திரு. சுரேஸ்குமார்  அவர்களும் வாழ்வாதார திட்ட உதவி உத்தியோகத்தர் தி. சந்திரசேகரம் அவர்களும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களும் கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு.ந.தயாசீலன் அவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர். பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மக்கள் வியாபாரச் சந்தையில் விற்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் மிகச் சிறப்பாக கொள்வனவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது.
இந் நிகழ்வில் நிறுவனத்தின் உத்தியோகஸ்தர் தி.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சங்கீதக் கதிரை நிகழ்விலும் பல இளைஞர்கள், பெரியோர்கள் கலந்து சிறப்பித்து பல பரிசுப் பொருட்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிறுவனத்தின் அடுத்த கட்ட நிகழ்வு எதிர்வரும் 23, 24- 04-2013ம் திகதிகளில் அம்பிளாந்துறை கற்சேனை மைதானத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக